I


642திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     ஒருகை மார்போடே விளங்காநிற்கு’ எனவும், ‘இறைவன்
மோனமுத்திரை யத்தனாய்த்தானாயே யிருந்து காட்ட ஊமைத் தசும்புள் நீர்
நிறைந்தாற்போல ஆனந்த மயமான வொளி மாணாக்கர்க்கு நிறைதலின்
அதற்குரிய மோன முத்திரை கூறிற்று’ எனவும நச்சினார்க்கினியர் உரை
விரித்தமை காண்க. காளை யென்பது கட்டினமையை உணர்த்துகிறது. (16)

நீண்டதிரி முண்டமழ னெற்றிவிழீ பொத்தக்
காண்டகைய கண்டிகை வளைந்தொழுகு காதிற்
பூண்டகுழை கௌவிய பொவன் செய்பல காசு
சேண்டவ ழிளங்கதிர் சிரித்திருள் சிதைப்ப.

     (இ - ள்.) நீண்ட திரி முண்டம் நெற்றி அழல் விழிபொத்த - நீண்ட
திரிபுண்டரமானது நெற்றியிலுள்ள அனற் கண்ணை மறைக்கவும், காண்
தகைய கண்டிகை - காணத்தக்க அழகினையுடைய (கழுத்திலணிந்த)
கண்டிகையோடு, வளைந்து ஒழுகு காதில் பூண்ட குழை கௌவிய -
வளைந்து நீண்ட திருச்செவியில் அணிந்த குண்டலங்கள் கௌவியுள்ள,
பொலன் செய் பல காசு - விளக்கஞ் செய்யும் பலமணிகளும், சேண் தவழ்
இளங்கதிர் சிரித்து - வாளிற்றவழும் இளஞாயிற்றைச் சிரிப்பது போலும் ஒளி
வீசி, இருள் சிதைப்ப - இருளை ஓட்டவும் எ - று.

     திரிமுண்டம் - திருநீற்றின் மூன்று கீற்று. கண்டிகையும் குழையும்
கௌவிய வென்க. கௌவுதல் - அகப்படப் பற்றிக் கொள்ளுதல்.
பதிக்கப்பட்ட வற்றைக் கௌவிய வென்றார். சிரித்து - சிரிப்பது போலும்
ஒளிவிட்டு; சிரித்தல் - எள்ளி நகுதல். (17)

உத்தரிய வெண்படம் வலம்பட வொதுங்க
முத்தவள நூலினொடு முத்தவிடை யிட்டு
வைத்தணியு மக்கவட மாலையெறி வாளாற்
பத்தரை மறைத்தமல பந்தவிருள் சிந்த.

     (இ - ள்.) வெள் உத்தரியபடம் வலம்பட ஒதுங்க - வெள்ளிய
உத்தரியமாகிய அடை வலத்திற் பொருந்த ஒதுங்கவும், தவள முந்
நூலினொடு வெள்ளிய பூணூலொடு, முத்தம் இடை இட்டுவைத்து அணியும்
அக்கவட மாலை - முத்துக்களை இடையிட்டுக் கோவைசெய்து அணிந்த
உருத்திராக்க மணி மாலை, எறி வாளால் - வீசும் ஒளியால், பத்தரை
மறைத்த மலபந்த இருள் சிந்த - அன்பர்களை மறைத்த ஆணவ
பந்தமாகிய இருள் சிதறவும் எ - று.

     உத்தரியம் - மேலாடை. வடம், மாலை ஒருபொருளன. நூலும்
மாலையும் எறியு மென்க. எறிகின்ற வாட்படை யென்பதோர் பொருளும்
தோன்ற நின்றது. பந்த இருள் - செறிந்த இருள் என்னலுமாம். மேற்
செய்யுளிற் புறவிருளை யோட்டுதல் கூறி, இச்செய்யுளில், அகவிருளை
யோட்டுதல் கூறினார். (18)