I


வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலம்643



கண்டிகை தொடுத்திரு கரத்தினொடு வாகு
தண்டனிடு மாலைவிட வாளரவு தள்ள
வெண்டுகிலி னானவிரி கோவண மருங்கிற்
றண்டரிய பட்டிகை வளைந்தொளி தழைப்ப.

     (இ - ள்.) கண்டிகை தொடுத்து - உருத்திராக்க மணிகளைக் கோத்து,
இரு கரத்தினொடு தண்டு வாகின் இடுமாலை - இரண்டு கைகளிலும்
தண்டினை யொத்த தோள்களிலும் அணிந்த மாலை, விடம் வாள் அரவு
தள்ள - நஞ்சினையுடைய கொடிய பாம்பணிகளை ஒழிக்கவும், வெண்துகிலின்
ஆனவிரி கோவணம் மருங்கில் - வெள்ளிய ஆடையாற் போக்கிய விரிந்த
கோவணத்தின் பக்கத்தில், தண்டு அரிய பட்டிகைவளைந்து ஒளிதழைப்ப -
நீங்குதலில்லாத பட்டிகை சூழ்ந்து ஒளி மிகவும் எ - று.

     கண்டிகை - உருத்திராக்கம். தொடுத்து இடுமாலை, அரவினை
யொழித்து மாலை யணிந்ததனை ‘மாலை விடவாளரவு தள்ள’ என்றார்;
அரவின் விடமென மாற்றி, அடியார்களின.் மாயையாகிய விடத்தை
யொழிக்க வென்பதோர் பொருளுங் கொள்க;

"உலோகா யதனெனு மொண்டிறற் பாம்பின்
கலாபே தத்த கடுவிட மெய்தி
அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவும்"

என்பது திருவாசகம். தண்டல் - நீங்குதல். பட்டிகை - அரைப்பட்டிகை. (19)

வண்டுவரி பாடுவன போலமலர் பாத
புண்டரிக மேலுழல் சிலம்புகள் புலம்பத்
தொண்டரக மாசிரு டுணித்துமுடி சூட்டும்
முண்டக மலர்ப்புறம் விறற்கழன் முழங்க.

     (இ - ள்.) வண்டு வரி பாடுவன போல - வண்டுகள இசைபாடுதல்
போல, மலர்பாதபுண்டரிகம் மேல் உழல் சிலம்புகள் புலம்ப - மலர்ந்த
திருவடித் தாமரையின்மீது சூழ்ந்த சிலம்புகள் ஒலிக்கவும், தொண்டர்
அகமாசு இருள் துணித்து - அடியாரிகளின் அக வழுக்காகிய ஆணவ
இருளைப் போக்கி, முடிசூட்டும் முண்டகமலர்ப்புறம் அவர்கள் முடியிற்
சூட்டுகின்ற தாமரை மலர்போலும் திருவடியின்கண், விறற்ல கழல் முழங்க -
வெற்றியை யுடைய வீரகண்டை ஒலிக்கவும் எ - று.

     வரி - இசைப்பாட்டு. உழலல் - அசைதலுமாம் முண்டக மலர்
திருவடிக்கு ஆகுபெயர். (20)

ஏதமில் பவித்திரம் வலக்கர னிமைப்பப்
போதம்வரை புத்தக மிடக்கையது பொற்ப
ஓதியுண ராதலறி யோலமிடும் வேதம்
பாதுகைக ளாகியிரு பாதமலர் சூட.