என - நுங்கள் விருப்பம்
யாதென்று வினவ, பணிந்து சொல்வார் - அவர்கள்
வணங்கிக் கூறுகின்றார்கள் எ - று.
கலைகள்
எல்லாவற்றுக்கும் என உருவு பிரித்துக்கூட்டுக. எல்லா
வித்தைகளம் ஈசானனிடத்தினின்றும் தோன்றியன வென்னும் உண்மை
கூறியவாறு. வளை வெனினும் வணங்க மெனினும் ஒக்கும் : குற்றம்
அறுதற்குக் காரணமாகிய தவமுமாம். (25)
அடியரே முய்யு மாறு முகமெலா யளிக்கு மாறும்
படியிலா வரத்த வேதப் பயனருள் செய்தி யென்னக்
கொடியமா பாசந் தீர்ப்பான் குரவனம் முனிவ ரோடு
முடிவிலா விலிங்க முன்போய்மறைப்பொருண் மொழிவதானான். |
(இ
- ள்.) அடியரேம் உய்யுமாறும் - அடியேங்கள் உய்தி கூடும்
வண்ணமும், உலகு எலாம் அளிக்குமாறும் - உலகம் அனைத்தையும் ஓம்பும்
வண்ணமும், படி இலா வரத்த வேதப் பயன் அருள் செய்தி என்ன -
ஒப்பற்ற சிறப்பினையுடைய மறைகளின் பொருளை அருளிச் செய்வாய் என
விண்ணப்பிக்க, கொடிய மா பாசம் தீர்ப்பான் குரவன் - (உயிர்களின் மிகக்
கொடிய பாசங்களைப் போக்கி யருளும் அக்குரவன், அம்முனிவரோடு -
அந்த முனிவர்களுடன், முடிவு இலா இலிங்கம் முன்போய் மறைப்பொருள்
மொழிவது ஆனான் - அழிவில்லாத இலிங்கத்தின் திருமுன் சென்று
வேதங்களின் பொருளை அருளு வானாயினன் எ - று.
அளிக்குமாறும்
- அளிக்கப்படுமாறும் என்றுமாம். வரத்த -
மேன்மையுடைய : குறிப்புப் பெயரெச்சம். தீர்ப்பான் : பெயரெச்சப்
பொருட்டாய் நின்றது; முனிவர்களின் பாசத்தைத் தீர்க்கவென்
றுரைப்பாருமுளர். முடிவிலா என்றமையால் முதலுமில்லா வென்பது கொள்க.
மொழிவது : தொழிற்பெயர். (26)
அந்தணிர் கேண்மின் சால வருமறைப் பொருள்க ளெல்லாம்
மந்தண மாகு மிந்த மறைப்பொரு ளறித றானே
நந்தலில் லாத போகப் பயனுக்கு நலியும் பாச
பந்தனை கழிக்கும் வீட்டின் பயனுக்குங் கருவி யாகும். |
(இ
- ள்.) அந்தணிர் கேண்மின் - முனிவர்களே கேளுங்கள், அரு
மறைப்பொருள்கள் எல்லாம் சால மந்தணம் ஆகும் - அரிய வேதங்களின்
பொருள்களனைத்தும் பெரிதும் இரகசியமாகும்; இந்த மறைப்பொருள் அறிதல்
தானே - இந்த வேதப்பொருளை அறிதலே, நந்தல் இல்லாத போகப்
பயனுக்கும் - கெடுதலில்லாத போகப் பேற்றிற்கும், நலியும் பாச பந்தனை
கழிக்கும் வீட்டின் பயனுக்கும் - வருந்துகின்ற பாச பந்தத்தைப் போக்கும்
வீடுபேற்றிற்கும், கருவி ஆகும் - சாதனமாகும் எ - று.
சால
மந்தணம் எனக் கூட்டுக. தானே யென்பதின் ஏகாரம் தேற்றம்.
போகப்பயன் - போகமாகிய பயன். கழிக்கும் வீடு - கழித்தெய்தும் வீடு.
வீட்டின் : இன்சாரியை அல்வழிக்கண் வந்தது. மறைப் பொருள்
|