I


வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலம்647



கேட்டலாலே. நந்திடு துக்கமெல்லா நண்ணுறாதகலும்’ எனப் பாடங்
கொண்டாரு முளர். (27)

உத்தம சயம்புக் குள்ளு முத்தம தரமாய் மேலாந்
தத்துவ மாகு மிந்தச் சுந்தர சயம்பு லிங்கம்
நித்தமாய் மறைகட் கெல்லா நிதானமாம் பொருளா யுண்மைச்
சுத்தவத் துவித மான சுயம்பிர காச மாகும்.

     (இ - ள்.) உத்தம சயம்புக் குள்ளும் உத்தம தரமாய் உத்தமமான
சுயம்புலிங்கங்களுக்குள்ளும் மேலான உத்தமமாகி, மேலாம்தத்துவம் ஆகும்
இந்தச் சுந்தரசயம்புலிங்கம் - மேன்மையான தத்துவங்களின் வடிவமாகிய
இந்தச்சுயம்புவாகும் சொக்கலிங்கம், நித்தமாய் என்றும் அழியாததாய்,
மறைகட்கு எல்லாம் நிதானம் ஆம் பொருளாய் - வேதங்களனைத்திற்கும்
ஆதி காரணமாகிய பொருளாய், உண்மைச் சுத்த அத்துவிதமான சுயம்பிர
காசமாகும் - உண்மையாகிய சுத்தாத்துவிதமான சுயம்பிரகாசமாக விளங்கும்
எ - று.

     உத்தமம் - எல்லாவற்றுள்ளும் மேம்பட்டது; அதனைப் பின்னும்
சிறப்பித்து ‘உத்தமதரம்’ என்றார். அத்துவிதம் என்பதற்கு இதுவே
பொருளென்பார். ‘உண்மை’ என்றார்; சுத்தம் என்றதும் இக்கருத்துப் பற்றியே
யென்க. அத்துவிதம் என்பது ‘வேறன்மை’ என்னும் பொருட்டு;
சிவஞானபோதம் இரண்டாஞ் சூத்திரத்தில் வரும் "அத்து விதமென்ற
சொல்லானே ஏக மென்னில் ஏகமென்று சுட்டுவ துண்மையின் அத்துவித
மென்ற சொல்லே அந்நிய நாத்தியையுணர்த்துமாயிட்டு" என்னும் பொழிப்பும்,
அதற்கு மாதவச் சிவஞானயோகிகள் தம்மதிவன்மையால் விரித்த வுரையும்
நோக்குக. ‘நிதானமதாகி நீங்காச் சத்தியப் பொருளுமாகித் தயங்குறு மென்பர்
நூலோர்’ எனப் பாடங்கொண்டாருமுளர்; இங்ஙனம் மிக்க
வேற்றுமையுடையவாய்க் காணப்படும் பாடமெல்லாம் மதுரைக் காண்ட
வளவிற் பொழிப் புரை யெழுதி வெளிப்படுத்தினார் ஒருவரே
கொண்டனவாகும். (28)

நிறைபரா பரம்விஞ் ஞான நிராமய மென்று நூல்கள்
அறைபரம் பிரம மாகு மிதனுரு வாகு மேக
மறையிதன் பொருளே யிந்தச் சுந்தர வடிவா யிங்ஙன்
உறைசிவ லிங்க மொன்றை யென்பர்நூ லுணர்ந்த நல்லோர்.

     (இ - ள்.) நிறை பராபரம் விஞ்ஞானம் நிராமயம் என்று நூல்கள்
அறை - எங்கும் நிறைந்த பராபரமென்றும் விஞ்ஞான மென்றும் நிராமய
மென்றும் நூல்கள் கூறுகின்ற, பரம் பிரமமாகும் இதன் உரு பரப்பிரமமாகிய
இந்த மூர்த்தியின் திருவுருவமே, ஏக மறை ஆகும் - ஒன்றாயுள்ள
வேதமாகும்; அதன் பொருள் - இந்த வேதத்தின் பொருளும், இந்தச்
சுந்தரவடிவாய் இங்ஙன் உறை சிவலிங்கமே - இந்தச் சுந்தர மூர்த்தமாய்
இங்கே எழுந்தருளிய சிவலிங்கமே ஆகும்; நூல் உணர்ந்த நல்லோர் -
உண்மை நூல்களைக் கற்றுணர்ந்த நல்லறிவுடையோர், ஒன்றே என்பர் -
(இச்சிவலிங்கமும் வேதமும்) வேறல்ல என்று கூறுவர் எ - று.