நிராமயம் - நோயின்மை.
பராபரம் உண்மையையும், விஞ்ஞானம் அறிவையும்,
நிராமயம் ஆனந்தத்தையும் குறிப்பனவாகக் கொள்க. உருவேயாகும் என்றும்,
பொருளும் சிவலிங்கமேயாகும் என்றும் ஏகாரத்தையும் ஆகும் என்பதனையும்
பிரித்துச் கூட்டியுரைக்க. ஒன்றே யென்ற கருத்தினை,
"மறையுமாய் மறையின்
பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே" |
என்னும்
திருவாசகம் வலியுறுத்தல் காண்க. முற்கூறப்பட்டவர் இச்செய்யுள்
முழுவதையும் மாற்றி வேறுபாடங் கொண்டனர். (29)
ஆகையான் மறையு மொன்றே யருமறைப் பொருளுமொன்றே
சாகையா லனந்த மாகித் தழைத்ததச் சாகை யெல்லாம்
ஓகையா லிவனை யேத்து முலகுத யாதிக் கிந்த
ஏகனா ணையினான் மூன்று மூர்த்தியாக யிருந்தா னன்றே. |
(இ
- ள்.) ஆகையால் மறையும் ஒன்றே அருமறைப் பொருளும்
ஒன்றே - ஆதலால் வேதமும் ஒன்றே அரிய அவ்வேதத்தின் பொருளும்
ஒன்றே, சாகையால் அனந்தமாகித் தழைத்தது - (அவ்வேதம்) சாகைகளால்
அளவிறந்த பேதமாகித் தழைத்துள்ளது; அ சாகை எல்லாம் ஓகையால்
இவனை ஏத்தும் - அந்தச் சாகைகளனைத்தும் மகிழ்ச்சியோடு இவனையே
துதிக்கும்; உலகு உதய ஆதிக்கு இந்த ஏகன் ஆணையினால் மூன்று
மூர்த்தியாய் இருந்தான் - உலகத்தின் தோற்ற முதலிய மூன்று தொழிற்கும்
இந்த ஒருவனாகிய சொக்கலிங்க மூர்த்தி (தனது) சத்தியால் மூன்று
மூர்த்தியாய் இருந்தருளினான் எ - று. ஆகையால் மறையு மொன்றே
அருமறைப் பொருளு மொன்றே என்றது மேற் செய்யுளற் கூறியதனை
அநுவதித்தவாறு; வேதமும் ஒன்றே இறைவனும் ஒருவனே என்னும் பொருள்
இரட்டுற மொழிதலாற் கொள்க. உதயாதி - தோற்றம் நிலை இறுதி என்பன;
தோற்றுவித்தல் முதலியவற்றுக்கு அயன் மால் உருத்திரனாகி யிருந்தானென்க.
ஏகனென்பது இறைவனுக்கோர் பெயர்;
"ஏக னநேக னிருள்
கரும மாயையிரண்
டாகவிதை யாறாதி யில்" |
என்று
திருவருட்பயன் கூறுதலுங் காண்க. அன்று, ஏ : அசைகள்.
இச்செய்யுளையும் திரித்துப் பாடங்கொண்டனர். (30)
மலர்மக னாகி மூன்று வையமும் படைத்து மாலாய்
அலைவற நிறுத்தி முக்க ணாதியா யழித்தம் மூவர்
தலைவனாய்ப் பரமா காச சரீரியாய் முதலீ றின்றித்
தொலைவருஞ் சோதி யாமிச் சுந்தர விலிங்கந் தன்னில். |
(இ
- ள்.) மலர் மகனாகி மூன்று வையமும் படைத்து பிரமனாகி
மூன்றுலகங்களையும் ஆக்கி. மாலாய் மலைவு அறநிறுத்தி - திருமாலாகி
(உயிர்கள்) வருத்தமற அளித்து, முக்கண் ஆதியாய் அழித்து - மூன்று
|