கண்களையுடைய உருத்திரனாகி
அழித்து, அம்மூவர் தலைவனாய் - அந்த
மூன்று மூர்த்திகளுக்குந் தலைவனாகியும், பரமாகாச சரீரியாய் - சிதா காயமே
திருமேனியாயுள்ளவனாகியும், முதல் ஈறு இன்றித் தொலைவு அருஞ்
சோதியாம் - ஆதி அந்த மில்லாது என்றுங்கெடாத ஒளிவடிவாகியு முள்ள,
இ சுந்தர இலிங்கம் தன்னில் - இந்தச் சொக்கலிங்க மூர்த்தி யிடத்தில் எ-று.
நான்முகன்
திருமாலினும் சங்காரத் தொழில் நடத்தும் உருத்திரனுக்கு
முதன்மை கூறுவார், முக்கணாதியாய் என்றார். மூவரிடத்து நின்றம்
முத்தொழில் நடாத்துபவன் அம்மூவர்க்கும் தலைவனாகிய முதல்வன்
ஒருவனே யாமென்பார். ஆகி யென உபசரித்துக்கூறினார் மூவர்
தலைவனாதலை மூவர்கோனாய் நின்ற முதல்வன் என்னும்
திருவாசகத்தானும் அறிக. பரம ஆகாசம் -
ஞானமாகிய சூக்கும ஆகாயம்;
வடமொழி நெடிற்சந்தி. ஞானமே திருவுருவா யென்க. (31)
[எழுசீரடி யாசிரிய விருத்தம்]
|
|
ஆதியி லான்ம
தத்துவ மான
வலர்மகன் பாகமு நடுவில்
நீதியில் விச்சா தத்துவ மான
நெடியவன் பாகமு முடிவில்*
ஓதிய சிவதத் துவமென லான
வுருத்திர பாகமு முதிக்கும்
பேதியிம் மூன்றி லெண்ணிறத் துவங்கள்
பிறக்குமிம் மூன்றினு முறையால். |
(இ
- ள்.) ஆதியில ஆன்மதத்துவம் ஆன அலர்மகன் பாகமும் -
முதலில் ஆன்ம தத்துவமான் பிரமன் பாகமும், நடுவில் நீதியில்
விச்சாதத்துவமான நெடியவன் பாகமும் - இடையில் முறைப்படி
வித்தியாதத்துவமான திருமாலின் பாகமும், முடிவிற் ஓதிய சிவதத்துவம்
எனலான உருத்திர பாகமும் - இறுதியில் சிறப்பித் தோதப்பட்டட
சிவதத்துவம் என்னலான உருத்திர பாகமும், உதிக்கும் - தோன்றும்,
பேதி , ன்றில் - இங்ஙனம் வேறுபட்ட இந்த மூவகைத் தத்துவங்களில். எண்
இல் தத்துவங்கள் பிறக்கும் - அளவிறந்தனவாய் ஏனைத் தத்துவங்கள்
தோன்றும்; இம் மூன்றினும் முறையால் - (இன்னும்) இந்த ன்று
தத்துவங்களினும் முறைப்படி எ - று.
ஆதி
- அடிப்பகுதி. முடிவு - மேற்பகுதி. ஆன்ம தத்துவம் - பூதம்
ஐந்து, தன்மாத்திரை ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து,
அந்தக் கரணம் நான்கு ஆகிய இருபத்து நான்குமாம். வித்தியா தத்துவம் -
காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை ஆகிய ஏழுமாம்.
சிவ தத்துவம் - சுத்த வித்தை, ஈச்சரம், சாதாக்கியம் சத்தி, சிவம் ஆகிய
ஐந்துமாம். ஓதி - ஏனைத் தத்துவங்களினும் சிறந்தனவென்றோதப்பட்ட;
(பா
- ம்.) * முடியில்.
|