"வித்தையோ
டீசர் சாதாக் கியஞ்சத்தி சிவங்க ளைந்தும்
சுத்ததத் துவஞ்சி வன்றன் சுதந்தர வடிவமாகம்" |
என்று சிவஞானசித்தியார்
கூறுதல் காண்க. பேதி - பேதித்த; வேறு பட்ட.
இம்மூன்று என்றது சமட்டி தத்துவங்களை யெனவும், எண்ணில் தத்துவங்கள்
என்றது ஆன்மாக்கள் தோன்றும் வெவ்வேறாய தத்துவங்களை யெனவும்
கொள்க. ஈற்றடி முழுதும் மாற்றியமைத்தனர் ஒருவர். (32)
ஓதரு மகார முகாரமே மகார
முதித்திடும் பிரணவம் விந்து
நாதமோ டுதிக்கும் வியத்ததா ரகத்தி
னல்லகா யத்திரி மூன்று
பேதமாம் பதத்தாற் பிறக்குமிக் காயத்
திரியிரு பேதமாம் பேதம்
யாதெனிற் சமட்டி வியட்டியென் றிரண்டு
மேதுவாம் வேட்டவைக் கெல்லாம். |
(இ
- ள்.) ஓது அரும் அகாரம் உகாரம் மகாரம் உதித்திடும் ஓதுதற்கு
அரிய அகாரமும் உகாரமும் மகாரமும் தோன்றும்; பிரணவம் விந்து
நாதமோடு உதிக்கும் - பிரணவமானது விந்து நாதங்களோடும் அவை
கூடுதலாற் றோன்றும்; வியத்த தாரகத்தில் - சிறந்த அப்பிரணவத்தில், நல்ல
காயத்திரி மூன்றுபேதமாம் பதத்தால் பிறக்கும் - நன்மை தருகின்ற காயத்திரி
மூன்று பேதமாகிய பதங்களாலேதோன்றும்; இக்காயத்திரி இருபேதம் ஆம் -
இந்தக் காயத்திரி இரண்டு வேற்றுமையாகும்; பேதம் யாது எனில் -
அவ்வேற்றுமை என்னவென்றால், சமட்டி வியட்டி - சமட்டி வியட்டி
யென்பனவாம்; என்ற இரண்டும் வேட்டவைக்கு எல்லாம் ஏதுவாம் - என்று
கூறப்பட்ட இவ்விரண்டும் விரும்பிய பொருள்களனைத்தையும் பெறுதற்குக்
காரணங்களாகும் எ - று.
அகரம்,
உகரம், மகரம், விந்து, நாதம் என்னும் ஐந்துங் கூடிப்
பிரணவமாகும்; இவை சூக்கும பஞ்சாக்கரம் எனவும் பெறும்;
"அகார
வுகார மகங்காரம் புத்தி
மகார மனஞ்சித்தம் விந்துப் - பகாதிவற்றை
நாம முளவடிவா நாடிற் பிரணவமாம்
போதங் கடற்றிரையே போன்று" |
என்னும் சிவஞானபோத
வெண்பாவும், அதற்கு மாதவச் சிவஞான
யோகிகள் உரைத்த விரிவுரையும் ஈண்டு உணரற்பாலன. வியத்த -
மேன்மையுடைய. தாரகம் - பிரணவம். மூன்று வாக்கிய வடிவமான
பதங்களாலென்க. பேதமென்னும் பொதுமை பற்றி யாதெனில் என ஒருமை
கூறினார். சமட்டி, விய்டடி என்பவற்றின் பொருள் முன் உரைக்கப்ப்ட்டது.
முற்கூறிய பதிப்பாளர் இச் செய்யுளை முழுதும் மாற்றியமைத்தனர். (33)
|