இன்னவை யிரண்டு மிவனருள் வலியா
லீன்றநான் மறையையந் நான்கும்
பின்னிவ னருளா லளவில வான
பிரணவ மாதி மந்திரமும்
அன்னவா றான தாரகத் தகார
மாதியக் கரங்களு முதித்த
சொன்னவக கரத்திற் சிவாகம நூலிச்
சுரவர னடுமுகத் துதித்த. |
(இ
- ள்) இன்னவை இரண்டும் இவன் அருள் வலியால் ஈன்ற நான்
மறையை - இவை இரண்டும் இந்தச் சொக்கலிங்க மூர்த்தியின் திருவருட்
சத்தியால் நான்கு வேதங்களையும் தந்தன; அ நான்கும் - அந்த நா
வேதங்களும், பின் - பின்பு, இவன் அருளால் அளவு இல ஆன - இவன்
திருவருளால் அளவிறந்தனவாய் விரிந்தன; பிரணவம் ஆதி மந்திரமும்
அன்னவாறு ஆன - பிரணவத்தை முதலாகவுடைய மந்திரங்களும் அவ்வாறே
விரிந்தன; தாரகத்து அகாரம் ஆதி அக்கரங்களும் உதித்த - (இன்னும்) அப்
பிரணவத்தில் அகர முதலிய எழுத்துக்களெல்லாம் தோன்றின; சொன்ன
அக்கரத்தின் சிவாகம நூல் இச்சுரவரன் நடு முகத்து உதித்த - கூறிய
அவ்வெழுத்துக்களினாலே சிவாகமா நூல் இச்சொக்கலிங்க மூர்த்தியின்
நடுமுகத்தில் தோன்றின எ - று.
ஈன்ற,
உதித்த என்பன அன்சாரியை பெறாது வந்த பலவின்பால் முற்று.
ஆன, ஆயின வென்பதன் விகாரம், சுர வரன் - தேவர்களில் மேலாயவன்.
நடு முகம் - ஈசானமுகம். சிவாகமம் - காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம்,
சீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சு மான், சுப்பிரபேதம், விசயம்,
நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம்,
சந்திரஞானம், முகவிம்பம், புரோற்கீதம், இரளிதம், சித்தம், சந்தானம்,
சருவோக்தம், பாரமேச்சுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாம்; இவை
தனித்தனி ஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என நான்கு
பாதங்களை உடையனவாம். இச்செய்யுளையும் பிறர் மாற்றியமைத்தனர். (34)
கீட்டிசை முகத்தொன் றடுத்தநா லைந்திற்
கிளைத்ததா லிருக்கது தென்பால்
ஈட்டிய விரண்டாம் வேதநூ றுருவோ
டெழுந்தது வடதிசை முகத்தில்
நீட்டிய சாம மாயிர முகத்தா
னிமிர்ந்தது குடதிசை முகத்தில்
நாட்டிய வொன்ப துருவொடு கிளைத்து
நடந்தது நான்கதா மறையே. |
|