விதமுறு நித்த மாதிமூ வினைக்கும்
வேண்டியாங்* குலகவர் போகங்
கரிபெற வியற்றுஞ் சிவார்ச்சனை வினைக்குங்
காரண மிச்சிவ கோசம். |
(இ
- ள்.) முதல் நுகர் நீரால் சினை குழைத்தாங்கு - வேர் நுகரும்
நீரினாலே கிளைகள் தளிர்த்தாற்போல, இம்முழு முதற்கு அருத்தும் நல்
அவியின் பதம் - அம்முழுமுதற் கடவுளுக்கு ஊட்டும் நல்ல அவியுணவு,
இவன் வடிவப் கண்ணவர் பிறக்கும் திருத்தியாம் - இவ்விறைவனது
வடிவமாகிய தேவர்கள் பிறருக்கும் நிறைவினைச் செய்யும்; பரன் இவன்
முகத்தின் - இப்பரமன் திருமுன்னர், விதம் ஊறு நித்தம் ஆதி மூவீனைக்கும்
- (இயற்றும்) வெவ்வேறு வகைப்பட்ட நித்திய முதலிய மூன்று
வினைகளுக்கும், உலகவர் போகம் கதி வேண்டியாங்கு பெற இயற்றும்
சிவார்ச்சனை வினைக்கும் - உலகத்தவர் இன்பப் பேற்றினையும் வீடு
பேற்றினையும் வேண்டிய வண்ணமே பெறும் பொருட்டுச் செய்யும்
சிவார்ச்சனைக்கும், இச் சிவகோசம் காரணம் - இச்சிவலிங்கமே
காரணமாயுள்ளது எ - று.
முதல்
நுகர் நீரால் சினை குழைத்தாங்கு என்னம் இவ்வுவமை, முன்
மூர்த்தி விசேடப் படலத்தி முதல் நுகர் நீரால் சினை குழைத்தாங்கு என்னம்
இவ்வுவமை, முன் மூர்த்தி விசேடப் படலத்திலும்,
"வேரூட்டு நீர்ப்போய்
மற்றைய சினைகளெல்லாந் தழைவிக்கு மரத்தின்" |
என இவ்வாசிரியராற்
கூறப்பட்டது அவியின் கதம் - அவியாகிய பதம்;
இன் : சாரியை. ஏனைத்தேவரெல்லாம் உடலாக இவன் உயிராக நிற்றலின்
பிறர்க்குந் திருத்தியாம் என்றார். மூவினை - நித்தியம், நைமித்தியம்,
காமியம் என்பன. போகமும் கதியும் பெற எனவிரிக்க. அருச்சனையாகிய
வினை. சிவகோசம் - சிவலிங்கம். இச்செய்யுளின் பிற்பகுதி பிறரால் மாற்றி
யுரைக்கப்பட்டது. (37)
மறைபல முகங்கொண் டலறிவா யிளைத்து
மயங்கவே றகண்டுபீ ரணமாய்
நிறைபரம் பிரம மாகுமிக் குறியைக்
கருமநன் னெறிவழாப் பூசை
முறையினு ஞான நெறியினிப் பொருளை
யருளினான் முயக்கற முயங்கும்
அறிவினுந் தெளிவ துமக்குநா முரைத்த
அருமறைப் பொருள்பிறர்க் கரிதால். |
(இ
- ள்.) மறை பல முகம் கொண்டு அலறி வாய் இளைத்து மயங்க
- வேதங்கள் பல முகங்களைக்கொண்டு (தேடியு முணராது) கதறி வாய்
சோர்ந்து மயங்க, வேறு அண்ட பூரணமாய் நிறை பரம் பிரமமாகும்
இக்குறியை - (அவற்றிற்கு) வேறாய் அகண்ட பரிபூரணமாய் நிறைந்த
(பா
- ம்.) * வேண்டியங்கு.
|