I


654திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



சொரூப சிவமாகிய இச்சிவலிங்கத்தை, நல் கருமம் நெறிவழாப் பூசை
முறையினும் - நல்ல கரும காண்டத்திற் கூறிய நெறியினின்றுந் தவறாத பூசை
முறையினாலும், ஞான நெறியின் ஞான காண்டத்திற் கூறிய நெறியினின்றுந்
தவறாத பூசை முறையினாலும், ஞான நெறியின் - ஞான காண்டத்திற் கூறிய
நெறியினின்று, அருளினால் இ பொருளை முயக்கு அறமுயங்கும் அறிவினும்
- திருவருளால் இதனைக் கலவாது கலக்கும் உணர்வினாலும், தெளிவது -
தெளிக; உமக்கு நாம் உரைத்த அருமறைப் பொருள் - நுங்கட்கு
நாமுணர்த்திய அரிய வேதங்களின் உட்கிடைப் பொருள், பிறர்க்கு அரிது -
ஏனையோர்க்கு அறிதற்கரிது எ - று.

     முகம் என்றது சாகையினை. சொரூப சிவமே இவ்விலிங்கமாகவுற்ற
தென்றார். திருவருளா லன்றி உணர்தல் கூடா தென்பார் ‘அருளினால்’
என்றார் முயக்கற முயங்கல் - ஒன்று மாகாது வேறு மாகாது கலத்தல்;
சிவோகம் பாவனை யெனலுமாம். தெளிவது : வியங்கோள். ஆல் : அசை.
‘உறை பரம்’ என்றும், ‘உறுகன்ம நெறிவழாப் பூசை என்றும் பாடங்
கொண்டார் பிறர். (38)

[அறுசீரடியாசிரியவிருத்தம்]
கருமத்தான் ஞான முண்டாங் கருமத்தைச் சித்த சுத்தி
தருமத்தா லிகந்த சித்த சுத்தியைத் தரும நல்கும்
அருமைத்தாந் தருமத் தாலே சாந்தியுண் டாகு மாண்ட
பெருமைத்தாஞ் சாந்தி யாலே பிறப்பதட் டாங்க யோகம்.

     (இ - ள்.) கருமத்தால் ஞாலம் உண்டாம் - நல்வினையினாலே
ஞானம் கைகூடும்; கருமத்தை சித்த சுத்தி தரும் - அந்நவ்வினைடிய
உளத்தூய்மை கொடுக்கம்; மத்தால இகந்த சித்த சுத்தியைத் தருமம் நல்கும்
- மயக்கத்தினின்று நீங்கிய உளத் தூய்மையை அறம் கொடுக்கும்;
அருமைத்து ஆம் தருமத்தாலே சாந்தி உண்டாக்கும் - அருமையை
யுடையதாகிய அவ்வறத்தாலே சாந்தி உண்டாகும்; மாண்ட பெருமைத்து ஆம்
சாந்தியாலே அட்டங்க யோகம் பிறப்பது - மாட்சிமைப்பட்ட
பெருமையையுடைய அச் சாந்தியினாலே அட்டாங்க யோகந் தோன்றும்
எ - று.

     கருமம் என்றது சிவபூசனையை என்றும், தருமம் என்றது சிவ
புண்ணியத்தை யென்றும் கொள்க. கருமத்தால் ஞானமுண்டா மென்பது,
"கிரியையென மருவுமவை யாவுஞானங் கிடைத்தற்கு நிமித்தம்" எனச்
சிவப்பிரகாசம் கூறுதலானறிக; சிவனை நோக்கிச் செய்யும் உண்மைச் சரியை
கிரியை யோகங்களினாலே ஞான முண்டாமென்பது கருத்தாகக் கொள்க.
மத்தத்தால் என்பது விகாரமாயிற்று; ஆல் இன்னுருபின் பொருளில் வந்தது.
சாந்தி - அகக்கரண அடக்கம். அட்டாங்யோகம் முன் உரைத்தமை காண்க.
சிவபுண்ணியத்தால் சித்த சுத்தியும், அதனால் சிவபூசனையாகிய கிரியையும்,
அதனால்சாந்தியும், அதனால் யோகமும், அதனால் ஞானமும் முறையே
உண்டாமென்பது இச்செய்யுளின் கருத்தாகும்.