I


வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலம்655



"நித்தியகை மித்தியகன் மங்கணிட்கா மியமாகப்
பத்தியுறச் செய்வதனாற் பாவமெலா நாசமுறும்
ஒத்தியன்மற் றதனானே யொழியாம லுறுசித்த
சுத்தியுள தாமென்று சொல்லுமால் மறையனைத்தும்"

என்னும் சூதசங்கிதைச் செய்யுள் இங்கு உணர்தற் பாலது. இது முதல்
நான்கு செய்யுட்களையும் பிறர் பாடம் மாற்றி யமைத்தனர். (39)

கிரியையான் ஞானந் தன்னாற் கிளர்சிவ பத்தி பூசை
தரிசனஞ் சைவ லிங்க தாபனஞ் செய்த லீசற்
குரியமெய் யன்பர் பூசை யுருத்திர சின்னந் தாங்கல்
அரியதே சிகன்பாற் பத்தி யனைத்தையுந் தெரிய லாகும்.

     (இ - ள்.) கிரியையால் ஞானம் தன்னால் - கிரியையினாலும்
ஞானத்தினாலும், கிளர் சிவபத்தி பூசை தரிசனம் - விளக்கந்தரும்
சிவபத்தியும் சிவபூசையும் சிவதரிசனமும், சைவலிங்க தாபனம் செய்தல் -
சிவலிங்கம் தாபித்தலும், ஈசற்கு உரிய மெய் அன்பர்பூசை -
சிவபெருமானுக்குரிய மெய்யடியார் பூசையும், உருத்திர சின்னம் தாங்கல் -
சிவசின்னந்தாங்தலும். அரிய தேசிகள் பால் பத்தி - அரிய குருபத்தியும்
ஆகிய இவை, அனைத்தையும் தெரியலாகும் - எல்லாவற்றையும்
அறியலாகும் எ - று.

     ஞானத்தாற் சீவன் முத்தரானவர்களும் பாச வாசனை தாக்காமைப்
பொருட்டுத் திருவைந் தெழுத்தோதலும், சிவனடியார் திருவேடத்தையும்
திருக்கோயிலையும் சிவனெனவே தேறி வழிபடுதலும் செய்வராகலின்
‘ஞானந்தன்னால்’ என்றுங் கூறினார். வேதத்தின் கரும காண்டத்தாலும்
ஞான காண்டத்தாலும் என்றும், ஆக மத்தின் கிரியாபாதத்தாலும் ஞான
பாதத்தாலும் என்றும் உரைத்தலுமாம். (40)

மறைவழி மதங்கட் கெல்லா மறைவிர மாணம் பின்சென்
றறைதரு மிருதி யெல்லாம் வைக்கனு குணமா மின்ன
முறையினான் மார்த்த மென்று மொழிவதம் மார்த்தஞ் சேர்ந்த
துறைகள்வை திகமா மேலாச் சொல்வதிச் சுத்த மார்க்கம்.

     (இ - ள்.) மறைவழி மதங்கட்கு எல்லாம் மறை பிரமாணம் -
வேதத்தின் வழிப்பட்ட மதங்களனைத்திற்கும் வேதம் பிரமாணமாகும்;
பின்சென்று அறைதரும் மிகுதி எல்லாம் அவைக்கு அனுகுணமாம -
அவ்வேதத்தின் வழியேசென்று அதற்குப் பொருந்தக் கூறும்
மிருதிகளனைத்தும் அம்மதங்களுக்கு ஏற்பனவாகும்; இன்ன முறையினால்
மார்த்தம் என்று மொழிவது - இங்ஙனம் வேதத்திற்குப் பொருந்தக் கூறும்
முறையினாலே அம்மிருதிக் கொள்கைகள் மார்த்தம் என்று கூறப்படும்;
அம்மார்த்தம் சேர்ந்த துறைகள் வைதிகம் ஆம் - அந்த மார்த்தத்தைத்
தழுவிய தேவ நெறிகள் வைதிகம் என்று கூறப்படும்; மேலாச் சொல்வது
இச் சுத்த மார்க்கம் - அவற்றுள் மேன்மை யுடைத்தாகச் சொல்லப்படுவது
இந்தச் சுத்த சன்மார்க்கமாகிய வைதிகசைவமாகும் எ - று.