I


மாணிக்கம் விற்ற படலம்659



மனைவியையும் உளப்படுத்தி ‘மின்னனாருள்’ என்றார். பொன்னனார் காமக்
கிழத்திய ரென்பதனைப் பின் ஏழாஞ் செய்யுளிற் கூறுவதானறிக. ஐம்போகம்
- ஐம்புல இன்பங்கள்;

"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள"                (திருக்குறள் - 1101)

என முப்பானூல் கூறுவது காண்க. ஐந்து போகம் விளையும் நிலம் போல்
ஐந்து போகமும் விளையும் கிழத்தியர் என நயம் படக் கூறினார்; நிலத்திற்கு
ஐம்போகமாவது ஆண்டொன்றில் ஐந்து முறை விளையும் விளைவு. பயிருக்கு
மாறாக வளர்கின்ற வென விரிக்க. தருக்கி வளர்ந்தாரென்பார், ‘வீறினார்’
என்றார். புத்தே ளென்ன அழகிற் சிறந்தும், களையென்ன மாறாகியும்
வளர்ந்தா ரென்க. (2)

பின்ன ரும்பெறற் குமரனைப் பெறுவது கருதி
மன்ன னுங்குலத் தேவியுங் கயற்கணி மணாளன்
தன்னை நோக்டிகயட் டமிசதுர்த் தசிமதி வாரம்
இன்ன நோன்புநோற் றொழுகுவா ரிறைவனின் னருளால்.

     (இ - ள்.) பின் - பின்பு. அரும் பெறல் குமரனைப் பெறுவது கருதி
- பெறுதற் கரிய பண்புடைய மகனைப்பெறுவது குறித்து, மன்னனும்
குலத்தேவியும் - அரசனும் அவன் குல மனைவியும், கயற்கணி மணாளன்
தன்னை நோக்கி - அங்கயற் கண்ணம்மையின் மணவாளனாகிய
சொக்கலிங்கப் பெருமானை நோக்கி, அட்டமி சதுர்த்தசி மதி வாரம் இன்ன
நோன்பு நோற்று ஒழுகுவார் - அட்டமி நோன்புசதுர்த்தசி நோன்பு சோமவார
நோன்பு ஆகிய நோன்புகளை அனுட்டித்து ஒழுகுவாராயினர்; இறைவன் இன்
அருளால் - இறைவனது இனிய திருவருளால் எ - று.

     அரும் பெறற் குமரன் - குரமனைவி வயிற்றுப் பிறந்த அரசாளு
தற்குரியனாகும் பண்புடைய புதல்வன். பெறலரும் என மாறுக. குலத்தேவி
- முறைப்படி மணந்த பட்டத்து மனைவி. அட்டமி முதலிய வற்றோடு
நோன்பு என்பதனைக் கூட்டுக. நோன்பு நோற்றொழுகு வார் என்றமையால்,
நெடு நாளாகியும் மனைவி வயிற்றுப் புதல்வன் பிறந்திலன் என்பது
தெளிவாகின்றது. (3)

சிறிது நாள்கழிந் தகன்றபின் கங்கையிற் சிறந்த
மறுவி லாவட மீன்புரை கற்பினாள் வயிற்றிற்
குறிய வாலவித் தங்குரம் போன்றொரு குமரன்
நிறையு நீருல கருட்குடை நிழற்றவந் துதித்தான்.

     (இ - ள்.) சிறிதுநாள் கழிந்து அகன்ற பி - சில நாட்கள்சென்று
நீங்கிய பின், கங்கையில் சிறந்த மறுவுஇலா வடமீன் புரைகற்பினாள்
வயிற்றில் - கங்கையினுஞ் சிறந்த தூய்மையுடைய குற்றமில்லாத
அருந்ததிபோலும் கற்பினையுடைய அத்தேவியின் வயிற்றிலே, குறிய ஆலம்
வித்து அங்குரம் போன்று - சிறிய ஆலம் வித்தில் தோன்றிய முளைபோல,
நிறையும் நீர் உலகு குடை நிழற்ற ஒரு குமரன் வந்து உதித்தான் - கடல்
சூழ்ந்த