I


மாணிக்கம் விற்ற படலம்661



     (இ - ள்.) வேங்கை வாய்ப்படும் மீனவன் விண் விருந்து ஆக -
(இங்ஙனம்) புலியின் வாய்ப்பட்ட வீரபாண்டியன் விண்ணுலகிலுள்ள
தேவர்க்கு விருந்தாயினமையால், வாங்கு நூல் மருங்கு இற கரம் மார்பு
எறிந்து - துவளுகின்ற நூல்போலும் இடையானது முறியுமாறு கையினால்
மார்பில் அடித்துக்கொண்டு, ஆரம் தாங்கு கொங்கை சாந்து அழிந்திட -
முத்து மாலையைத் தாங்கிய கொங்கைகளிற் பூசிய சாந்து அழிய, தடம் கண்
முத்து இறைப்ப - நீண்ட கண்கள் நீர்த்துளி சிந்த, மாதர் ஏங்க - மகளிர்
வருந்தவும், பொன் நகருளார் யாவரும் இரங்க - அழகிய நகரத்திலுள்ள
அனைவரும் கவலவும் எ - று.

     உயிர் துறந்து விருந்தாயினா னென்க. ஈண்டு அறஞ் செய்தமையால்
விண் விருந்தாயினான்;

"செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு"

என்று தமிழ் மறை கூறுவது காண்க. சாந்தழிந்திடுமாறு கண் முத்திறைப்ப
வென்க. மாதர் எறிந்து இறைப்ப ஏங்கவெனக் கூட்டுக. மாதர் - மனைவியும்,
காமக்கிழத்தியரும் முதலாயினார். (6)

மற்ற வேலைகா மக்கிழத் தியர்பெறு மைந்தர்
அற்ற நோக்கியீ தமையமென் றானைமா வாதி
உற்ற பல்பிற பொருணிதி யொண்கல னோடுங்
கொற்ற மௌலியுங் கவர்ந்தனர் கொண்டுபோய் மறைந்தார்.

     (இ - ள்.) அ வேலை - அங்ஙனம் வருந்தும் பொழுது,
காமக்கிழத்தியர் பெறுமைந்தர் - காமக் கிழத்தியர் பெற்ற பிள்ளைகள்,
அற்றம் நோக்கி - சோர்வு பார்த்து, ஈது அமையம் என்று - இதுவே ஏற்ற
சமயம் என்று கருதி, ஆனை மா ஆதி - யானை குதிரை முதலியனவும்,
உற்ற பிற பல்பொருள் - பொருந்திய ஏனைப் பல பொருள்களும், நிதி ஒண்
கலனோஷடும் கொற்ற மௌலியும் -திரவியங்களும் ஒள்ளிய
அணிகலன்களும் வெற்றியையுடைய முடியுமாகிய இவைகளை, கவர்ந்தனர்
கொண்டு போய் மறைந்தார் - வௌவிக் கொண்டுபோய் மறைந்தார்கள்
எ-று.

     மற்று : அசை. ஆதியாக உற்ற பிற பல் பொருளும் என்னலுமாம்.
கவர்ந்தனர் : முற்றெச்சம். (7)

மன்ன னாணையா றொழுகிய மந்திரக் கிழவர்
மின்னு வேலிளங் குமரனைக் கொண்டுவிண் ணடைந்த
தென்னர் கோமகற் கிறுதியிற் செய்வினை நிரப்பி
அன்ன காதலற் கணிமுடி சூட்டுவா னமைந்தார்.

     (இ - ள்.) மன்னன் ஆணை ஆறு ஒழுகிய மந்திரக் கிழவர் -
அரசனது ஆணைவழி நடந்த அமைச்சர்கள், மின்னுவேல் இளங் குமரனைக்
கொண்டு - ஒளிவிடும் வேற்படை ஏந்திய இளமையையுடைய புதல்வனால்,
விண் அடைந்த தென்னர் கோமகற்கு - துறக்கம் புக்க செழியர்
தலைவனாகிய வீரபாண்டியனுக்கு, இறுதியில் செய்வினை நிரப்பி - முடி