I


662திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



வீற் செய்யவேண்டிய ஈமக் கடன்களை நிறைவித்து, அன்ன காதலற்கு
அணிமுடி சூட்டுவான் அமைந்தார் - அந்தப் புதல்வனுக்கு அழகிய
முடிசூட்டத் தொடங்கி எ - று.

     மந்திரம் - சூழ்ச்சி; கிழவர் - உரிமையுடையவர். கொண்டு :
மூன்றாவதன் சொல்லுருபு. இறுதியிற் செய்வினை - பிற்கடன். சூட்டுவான் :
வானீற்று வினையெச்சம். அமைந்தார் : முற்றெச்சம். (8)

நாடிப் பொன்னறை திறந்தனர்* நவமணி மகுடந்
தேடிக் கண்டிலர் நிதிசில கண்டிலர் திகைத்து
வாடிச் சிதைந்தநோ யுழந்திவை+ மாற்றலர் கூட்டுண்
டோடிப் போயின+ வாகுமென் றுணர்ந்திது நினைவார்.

     (இ - ள்.) நாடிப் பொன் அறை திறந்தனர் - கருவூலத்தினைத் திறந்து
பார்த்தனர்; நவமணி மகுடம் தேடிக் கண்டிலர் - ஒன்பான் மணிகளும்
இழைத்தியற்றிய முடியினைத் தேடிக் காணா ராயினர் : சில நிதி கண்டிலர்
- வேறு சில பொருள்களையும் காணாதவ ராயினர்; திகைத்து வாடி
சிந்தைநோய் உழந்து - மணங்கி வாட்டமுற்று மனம் வருந்தி, இவை மாற்றலர்
கூட்டுண்டு ஓடிப்போயின ஆகுமென்று உணர்ந்து - இவைகள் பகைவரால
கவர்ந்து கொண்டுபோகப்பட்டனவாகும் என்று அறிந்து, இது நினைவார் -
இதனைக் கருதுவா ராயினர் எ - று.

     திறந்து நாடினர் என விகுதி பிரித்துக் கூட்டுக. போயின - போகப்
பட்டன. திறந்தனர், கண்டிலர் என்பவற்றை எச்சமாக்கி யுரைத்தலுமாம். (9)

வேறு மாமுடி செய்துமா லென்னினோ விலைமிக்
கேறு மாமணி யிலையர சிருக்கையின் றின்றேற்
றேறு நீருல கலையுமென் செய்வதிங் கென்னா
ஆறு சேர்சடை யாரருள் காண்டுமென் றமைச்சர்.

     (இ - ள்.) வேறு மாமுடி செய்தும் என்னினோ - வேறு சிறந்த முடி
செய்வோம் என்று கருதினாலோ, விலை மிககு ஏறு மாமணி இலை -
விலைமிகுந்து உணர்ந்த பெரிய மணிகள் இல்லை; அரசு இருக்கை இன்று -
(முடி இல்லையானால்) அரசிருக்கையு மில்லை; இன்றேல் -
அரசில்லையானால், தேறு நீர் உலகு அலையும் - தெளிந்த கடல் சூழ்ந்த
உலகு வருந்தும்; இங்கு செய்வது என் என்னா - இங்கு நம்மாற் செய்யத்
தகுவதுயாது என்று (கவலையுற்றுப் பின்), ஆறுசேர் சடையார்
அருள்காண்டும் என்று - கங்கையை யணிந்த சடையை யுடைய
சொக்கலிங்கப் பெருமானது திருவருளைக் காண்போமென்று, அமைச்சர் -
மந்திரிகள் எ - று.

     ஆல் : அசை. முடியில்லையேல் என்பதும், அரசு என்பதும் அவாய்
நிலையால் வருவிக்கப்பட்டன. தேறுநீர் - கடல். என் செய்வதென்று கவன்று,
பின், அருள் காண்டுமென் றெண்ணினா ரென்க. செய்தும், காண்டும் என்பன
தன்மைப் பண்மையெதிர்கால முற்றுக்கள். (10)


     (பா - ம்.) * புகுந்தனர். +உழந்திது. +போயினதாகும்