I


மாணிக்கம் விற்ற படலம்665



என்பட ரெய்துகின் றீர்க ளென்வயின்
ஒன்பது மணிகளு முள்ள வாலாவை
பொன்பதி னாயிரங் கோடி* போனவென்+
றன்புற மணியெலா மடைவிற் காட்டுவார்.

     (இ - ள்.) என் படர் எய்துகின்றீர்கள் - என்னை துன்ப
முறுகின்றீர்கள், என்வயின் - என்னிடத்தில், ஒன்பது மணிகளும் உள்ள -
ஒன்பதுவகை மணிகளும் உள்ளன; அவை - அம்மணிகள், பதினாயிரங்
கோடி பொன்போன என்று - பதினாயிரங்கோடி பொன் விலையேறின
என்று, அன்பு உற மணி எலாம் அடைவில் காட்டுவார் - விருப்பம் பொருந்த
அவற்றையெல்லாம் முறையே காட்டத்தொடங்கி எ - று.

     படர் - துன்பம். இனித் துன்பமுற வேண்டா என்பார், ‘என்பட
ரெய்துகின்றீர்கள்’ என்றார். ஆல் : அசை. போன - விலையேறின,
விலையாகப் பொருந்தியன. (16)

இருந்தனர் கீழ்த்திசை நோக்கி யிட்டதோர்
கருந்துகி னடுவுமிந் திராதி காவலர்
அருந்திசை யெட்டினு மடைவிற் செம்மணி
பெருந்தண்முத் தாதியெண் மணியும் பெய்தரோ.

     (இ - ள்.) கீழ்த்திசை நோக்கி இருந்தனர் - கிழக்குத் திக்கை நோக்கி
இருந்து - இட்டது ஓர் கருந் துகில் நடுவும் - விரித்ததாகிய ஒரு கரிய
கம்பலத்தின் நடுவிலும், இந்திராதி காவலர் அருந்திசை எட்டினும் - இந்திரன்
முதலிய திசைக் காவலரின் அரிய திக்குகள் எட்டினும். அடைவில் -
முறையே, செம்மணி பெருந்தண் முத்தாதி எண்மணியும் பெய்து -
மாணிக்கத்தையும் பெரிய குளிர்ந்த முத்து முதலிய எடடு மணிகளையும்
வைத்து எ - று.

     நடுவில் மாணிக்கமும்; கிழக்கு முதலிய எண்டிசையிலும் முத்து முதலிய
எண்வகை மணியும் வைத்தென்ப. இருந்தனர் : முற்றெச்சம். அரோ : அசை.
(17)

இம்மணி வலனுடற் சின்ன மென்னவக்
கைம்மறி கரந்தவர் கூறக் கற்றநூற்
செம்மதி யமைச்சரச் செம்மல் யாரவன்
மெய்ம்மணி யாயதென் விளம்பு கென்னவே.

     (இ - ள்.) இம் மணி வலன் உடல்சின்னம் என்ன - இந்த மணிகள்
வலன் என்னும் அவுணனது உடலின் பகுதிகளென்று, அக் கை மறி கரந்தவர்
கூற - கையிலுள்ள மானை ஒளித்து வந்த அவ்வணிகர் கூற, நூல் கற்ற
செம்மதி அமைச்சர் - பல நூல்களையும் கற்ற நுண்ணிய அறிவினையுடைய
அமைச்சர்கள், அச் செம்மல் யார் - அவ்வலன் என்பான் யாவன், அவன்
மெய் மணி ஆயது என் - அவன் உடல் மணிகள் ஆயினமை எங்ஙனம்,
விளம்புக என்ன - கூறுக வென்று கேட்க எ - று.


     (பா - ம்.) * பதினாயிரகோடி. +போனதென்று.