உடற் சின்னம் -
குருதி முதலிய தாதுக்களும், பல் முதலியவும் ஆம். அகரச்
சுடடு கரந்தவர் என்பதன் விகுதியோடியையும். நூலறிவும், இயற்கையாகிய
நுண்ணறிவு முடையாரென்பார், கற்ற - நூற் செம்மதி யமைச்சர் என்றார்;
"மதிநுட்பம்
நூலோ டுடையார்க்கு." |
என்றார் திருவள்ளுவதேவரும்.
விளம்புக என்பதன் அகரம் தொக்கது. (18)
மேவரும் வலனெனு மவுணன் மேலைநாள்
மூவரின் விளங்கிய முக்கண் மூர்த்திசெஞ்
சேவடி யருச்சனைத் தவத்தின் செய்தியால்
யாவது வேண்டுமென் றிறைவன் கூறலும். |
(இ
- ள்.) மேவரும் வலன் எனம் அவுணன் - (பகைவர்) கிட்டு
தற்கரிய வலன் என்னும் அசுரன், மேலை நாள் - முன்னாளில், மூவரின்
விளங்கிய முக்கண் மூர்த்தி - மும்மூர்த்திகளினும் சிறந்து விளங்கும்
சிவபெருமானுடைய, செம் சேவடி - செவ்விய திருவடிகளில், அருச்சனை
தவத்தின் செய்தியால் - அருச்சித்தலாகிய திருத்தொண்டின் செம்மையால்,
இறைவன் - அப்பெருமான், யாவது வேண்டும் என்று கூறலும் - நினக்கு
யாதுவேண்டு மென்று வினாவிய வளவில் எ - று.
பகைவர்
அணுகுதற்கரிய வென்க. செம்மைப் பண்பு அடுக்கி வந்தது;
ஒன்று செந்நிறததையும், ஒன்று விகார மின்மையையும் குறிப்பன எனலுமாம்
அருச்சனையே தவமென்றார். தவத்தின், சாரியை அல்வழிக்கண் வந்தது.
யாவது : வகரம் விரித்தல். அவுணன் தன் செய்தியால் இறைவன் கூறலும்
என இயையும். (16)
தாழ்ந்துநின் றியம்பும்யான் சமரில் யாரினும்
போழ்ந்திற வாவரம் புரிதி யூழ்வினை
சூழ்ந்திறந் தாலென்மெய் துறந்த மாந்தரும்
வீழ்ந்திட நவமணி யாதல் வேண்டுமால். |
(இ
- ள்.) தாழ்ந்து நின்று இயம்பும் - வணங்கி நின்று கூறுவானாய்,
யான் சமரில் யாரினும் போழ்ந்து இறவா வரம் புரிதி - யான் போரின்கண்
யாராலும் பிளவுண்டு இறவாத வரத்தையருளுக; ஊழ் வினை சூழ்ந்து
இறந்தால் - (அங்ஙன மன்றி) ஊழ் வினையாற் சூழப் பட்டு இறப்பேனாயின்,
என் மெய் - என் உடம்பு, துறந்த மாந்தரும் வீழ்ந்திட - பற்றுக்களை
விடுத்த துறவினரும் விரும்பும் வண்ணம், நவமணி ஆதல் வேண்டும் -
ஒன்பான் மணிகளாக வேண்டும் எ - று.
இயம்பு
மென்பதனை எச்சப்படுத்துக. யாரினும் - எவராலும்; இன்னுருபு
மூன்றன் பொருட்டு. போழ்ந்து - வெட்டுண்டு : செயப்பாட்டு வினைப்
பொருளது, சூழ்ந்து என்பதும் அது. மாதரும் என்னும் உம்மை உயர்வு சிறப்பு.
மணியின் விசேடத்தால் விரும்ப வென்க. ஆல் : அசை. (20)
|