I


மாணிக்கம் விற்ற படலம்667



என்றுவேண் டலும்வர மீச னல்கினான்
அன்றுபோ யமர்குறித் தமரர் கோனொடு
சென்றுபோ ராற்றலுந் தேவர் கோனெதிர்
நின்றுபோ ராற்றல னீங்கிப் போயினான்.

     (இ - ள்.) என்று வரம் வேண்டலும் - என்று வரம் கேட்க. ஈசன்
நல்கினான் - இறைவன் (அங்ஙனமே) அருளினான்; அன்று அமர்
குறித்துப்போய் -அப்பொழுதே போரினைக் குறித்துச் சென்று, அமரர்
கோனொடு சென்று கோர் ஆற்றலும் - தேவேந்திரனொடு எதிர்த்துப் போர்
புரியவும், தேவர்கோன் அவ்விந்திரன், எதிர்நின்று போர் ஆற்றலன் -
நேர்நின்று போர் புரியும் விலயிலனாய், நீங்கிப் போயினான் - புறங்கொடுத்
தேகினான் எ - று.

     போய் என முன் வந்தமையின் சென்று என்பதற்கு எதிர்த்தென
உரைக்கப்பட்டது. ஆற்றலன் - செய்ய மாட்டானாய்; முற்றெச்சம். (21)

தோற்றவா னாடவன் மீண்டு சூழ்ந்தமர்
ஆற்றினும் வெல்லரி தழிவி லாவரம்
ஏற்றவ னாதலா லிவனைச் சூழ்ச்சியாற்
கூற்றினூ ரேற்றுதல் குறிப்பென் றுன்னியே.

     (இ - ள்.) தோற்ற வான் நாடவன் - இங்ஙனம் தோல்வியுற்ற
இந்திரன், அழிவு இலா வரம் ஏற்றவன் ஆதலால் - இறவாத வரம் பெற்றவன்
ஆதலால், மீண்டு சூழ்ந்து அமர் ஆற்றினும் வெல் அரிது - திரும்பவும்
வளைந்து போர் செய்தாலும் இவனை வெல்லுதல் கூடாது; இவனைச்
சூழ்ச்சியால் கூற்றின் ஊா ஏற்றுதல் குறிப்பு என்று உன்னி - இவனை
வஞ்சத்தால் கூற்றுகூன் ஊரிற் குடியேற்றுதலே செயற்பாலது என்று கருதி
எ - று.

ஆலோசித்து மீள அமர் புரியினும் என்றுரைத்தலுமாம். வெல் : முதனிலைத்
தொழிற் பெயர். குறிப்பு - கருத்து. (22)

விடங்கலுழ் படைக்கல னின்றி விண்ணவர்
அடங்கலுந் தழீஇக்கொள வடுத்துத் தானவ
மடங்கலை வருகௌ நோக்கி வானவக்
கடங்கலுழ் யானைபோற் கரைந்து கூறுவான்.

     (இ - ள்.) விடம் கலுழ் படைக்கலம் இன்றி - நஞ்சு சிந்தும்
படைக்கலம் இல்லாமல் விண்ணவர் அடங்கலும் தழீஇக்கொள - தேவரனை
வரும் சூழ்ந்து வர, கடம் கலுழ் வானவ யானைபோல் அடுத்து - மதம்
பொழியும் தேவயானைபோல் போர்க்களத்தை யடுத்து, தானவ மடங்கலை
நோக்கி வருக எனக் கரைந்து - அசுர சிங்கத்தை நோக்கி வருக என்று
அழைத்து, கூறுவான் - சொல்லுவான் எ - று.

     யானையானது சிங்கத்தை நோக்கி அழைப்பது போல் இந்திரன்
அவுணனை நோக்கி அழைத்தான் என்பது கருத்தாகக் கொள்க. கரைதல் -
அழைத்தல். (23)