விசையநின் றோள்வலி வென்றி வீக்கமெத்
திசையினும் பரந்ததச்* சீர்த்தி நொக்கியுள்
நசையறா மகிழ்ச்சியா னல்கு வேனுனக்
கிசையவேண் டியவரம் யாது கேளென. |
(இ
- ள்.) விசைய - வெற்றியை யுடையோய், நின் தோற்வலி வென்றி
வீக்கம் எத்திசையினும் பரந்தது - உன் தோளின் வலிமையும் வெற்றிப்
பெருக்கமும் எல்லாத் திசைகளிலும் பரவின; அ சீர்த்தி நோக்கி - அந்தப்
புகழ்ச்சியை நோக்கி. உள் நமை அறா மகிழ்ச்சியால் உனக்கு இசைய
நல்குவேன் - உள்ளத்தில் விருப்பம் நீங்காத மகிழ்ச்சியால் உனக்குப்
பொருந்த வரம் அளிப்பேன்; வேண்டிய வரம் யாது கேள் என - நீ
விரும்பிய வரம் யாதோ அதனைக் கேட்பாய் என்று கூற எ - று.
பரந்தது
: பன்மையி லொருமை; தோள் வலியானாய வென்றியென
உரைத்தலுமாம். நோக்கி - மனத்தால் நோக்கி; கருதி. பொருந்த வேண்டிய
வரம் கேள் அதனை நல்குவேன் என இயைத்தலுமாம். (24)
கடிபடு கற்பக நாடு காவலோன்
நொடியுரை செவித்துளை நுழையத் தானவன்
நெடியகை புடைத்துட னிமிர்ந்து கார்படும்
இடியென நகைத்திகழ்ந் தினைய கூறுவான். |
(இ
- ள்.) கடிபடு கற்பநாடு காவலோன் நொடி உரை - மணம்
பொருந்திய கற்பகத் தருவையுடைய விண்ணுலகிற் கிறைவனாகிய இந்திரன்
கூறிய உரை, செவித்துளை நுழைய - செவிகளின் தொளைகளிற் புகுதவும்,
தானவன் - அவுணன், நெடிய கை புடைத்து - நீண்ட கைகளை
ஒன்றோடொன்று தாக்கி. உடல் நிமிர்ந்து கார் படும் இடி என நகைத்து
இகழ்ந்து - உடல் நிமிர்ந்து முகிலிற் றோன்றும் இடி போலச் சிரித்து
இகழ்ந்து, இனைய கூறுவான் - இத்தன்மையன கூறுவான் எ - று.
நொடி
- கூறிய. நொடியுரை : வினைத்தொகை. இடிபோல் ஒலி
யுண்டாக நகைத்தென்க. (25)
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
|
நன்றிது மொழிந்தா
யாரு நகைக்கநீ யெனைவெந் கண்ட
வென்றியு மதனாற் பெற்ற புகழுநின் வீறு பாடும்
இன்றுநின் போரிற் காணப் பட்டவே யிசைபோ யெங்கும்
நின்றதெ யிதுபோ னின்கை வண்மையு நிற்ப தன்றொ. |
(இ
- ள்.) யாரும் நகைக்க நன்று இது மொழிந்தாய் - எவரும்
நகையாடுமாறு நல்லதாகிய இந்தமொழியைக் கூறினாய்; நீ எனை வெந்
(பா
- ம்.) * பரந்தவச் சீர்த்தி.
|