கண்ட வென்றியும்
- நீ என்னைப் புறங்கண்ட வெற்றியும், அதனால் பெற்ற
புகழும் - அவ்வெற்றியால் அடைந்த கீர்த்தியும், நின் வீறு பாடும் - நினது
பெருமிதமும், இன்று நின் போரில் காணப்பட்டவே - இன்று நீ என்னோடு
செய்த போரிற் காணப்பட்டனவே; இசை போய் எங்கும் நின்றதே -
புகழானது எங்கும் பரந்து சென்று நிலை பெற்றதே; இதுபோல் நின்கை
வண்மையும் நிற்பது அன்றோ - இது போல உனது வள்ளன்மையும்
நிலைபெறுவதல்லவா எ - று.
நன்று
இது - நல்லதாகிய இதனை : இகழ்ச்சிக் குறிப்பு. பகைவர்
அயலார், நண்பர் என்னும் யாவரும் நகைக்க வென்க. புறங்காட்டிய தோல்வி
வெந்கண்ட வென்றி யென்றும், அதனாலுண்டாய பழி புகழென்றும், சிறுமை
வீறுபாடென்றும், இகழ்ச்சி தோன்றக் கூறப்பட்டன. காண்ப்பட்டவே, நின்றதே
என்னும் ஏகாரங்கள் இவற்றை நீயும் அறிதியே என்னும் வினாப்பொருள்
தோன்ற நின்றன. இது போல் - இச்செயல் போல்; இசை நிலை பெற்றது
போல் என்றுமாம். (26)
ஈறிலா னளித்த நல்ல வரமெனக் கிருக்க நின்பால்
வேறுநான் பெறுவ துண்டோ வேண்டுவ துனக்கியா தென்பாற்
கூறுநீ யதனை யின்னே கொடுக்கலே னாகி னின்போற்
பாறுவீழ் களத்திற் றோற்ற பழிப்புகழ் பெறுவ னென்றான். |
(இ
- ள்.) ஈறு இலான் அளித்த நல்ல வரம் எனக்கு இருக்க -
தனக்கோர் இறுதியில்லாதவனாகிய சிவபெருமான் அருளிய நல்லவரங்கள்
எனக்கிருக்கவும், வேறு நான் நின்பால் பெறுவது உண்டோ - அவற்றிற்கு
வேறாக நான் உன்னிடம் பெறுவது தொன்று உண்டோ - என்பால் உனக்கு
வேண்டுவது யாது - என்னிடம் நினக்கு வேண்டியது யாது, நீ கூறு - நீ
சொல், அதனை இன்னே கொடுக்கலேனாகில் - அதனை இப்பொழுதே
கொடேனாயின் பாறுவீழ் களத்தில் - பருந்துகள் வீழ்கின்ற இப்போர்க்
களத்தில், நின்போல் தோற்ற பழிப்புகழ்பெறுவன் என்றான் - நின்னைப்
போன்றே தோல்வியுற்ற பழியாகிய புகழைப் பெறுவேன் என்று கூறினான்
எ - று.
ஈறிலான்
என்றமையால் முதலும் நடுவும் இல்லாதவ னென்பதும்
பெறப்படும் ஈ.றுடைய நின்பால் நன்மை யில்லாத வேறு என அடைகளை
எதிர் மறுத்துக்கொள்க. வேண்டுவதுனக் கியாதென்பாற் கூறுநீ என்றது
நின்பதவியினும் பெரிய செல்வங்களை யான் அளித்தற் குரியேன் என்று
குறிப்பிட்டவா றாயிற்று. தோற்றமையா லாகிய பழி எனப் பெயரெச்சம்
காரணப் பொருட்டாயது. பழிப்புகழ் - பழியாகிய புகழ்; பழியையே புகழாகப்
பெற்றுளாய் என்றவாறு. (27)
மாதண்ட வவுணன்
மாற்ற மகபதி கேட்டு வந்து
கோதண்ட மேருக் கோட்டிக் கொடும்புரம் பொடித்தான்வெள்ளி
வேதண்ட மெய்தி யாங்கோர் வேள்வியான் புரிவ னீயப்*
போதண்டர்க் கூட்ட வாவாய்ப் போதுவாய் வல்லை யென்றான். |
(இ
- ள்.) மாதண்ட அவுணன் மாற்றம் - பெரிய தண்டினையேந்திய
அசுரனது வார்த்தையை, மகபத கேட்டு உவந்து - இந்திரன்
(பா
- ம்.) * புவனானப்.
|