I


670திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



கேட்டு மகிழ்ந்து, கோதண்டம் மேரு கோட்டி - வில்லாக மேரு மலையை
வளைத்து, கொடும்புரம் பொடித்தான் - கொடிய அவுணர்களின் திரிபுரத்தை
நீறாக்கிய சிவபிரானது, வெள்ளி வேதண்டம் எய்தி - வெள்ளி மலையை
அடைந்து, ஆங்கு ஓர் வேள்வி யான் புரிவன் - அங்கு ஒரு வேள்வியினை
யான் செய்வேன்; அப்போது அண்டர்க்கு ஊட்ட - அப்பொழுது
தேவர்களுக்கு அவியூட்ட, நீ ஆவாய் வல்லை போதுவாய் என்றான் - நீ
வேள்விப்பசுவாகி விரைந்து வருவாயாக என்று கூறினான் எ - று.

     மாற்றம் - மறுமொழி. தான் நினைத்தது கைகூடிற்றென உவந்தென்க.
கோதண்டம் - வில்லின் பொதுமையை உணர்த்துவது. மேருவாகிய
வில்லையெனலுமாம். கேட்டு உவந்து போதுவாய் என்றான் என முடிக்க. (28)

அன்றொரு தவத்தோ னென்பு வச்சிர மொன்றே யாக
ஒன்றிய கொடையாற் பெற்ற புகழுடம் பொன்றே யென்போல்
வென்றியி னாலும் வீயா மெய்யெலா மணிக ளாகப்
பொன்றிய கொடையி னாலும் புகழுடம் பிரண்டுண் டாமே.

     (இ - ள்.) அன்று ஒரு தவத்தோன் - அக்காலத்திலே ஒரு தவப்
பெரியானாகிய ததீசிமுனிவன், என்பு ஒன்றே வச்சிரம் ஆக - (பூத உடலின்)
முதுகந்தண்டாகிய எலும்பு ஒன்றே வச்சிரப்படை ஆமாறு, ஒன்றிய
கொடையால் பெற்ற புகழ் உடம்பு ஒன்றே - மனமிசைந்து கொடுத்த
கொடையினாற் பெற்ற புகழுடம்பு ஒன்றேயாகும்; வென்றியினாலும் - (பிறரை
வெல்லும்) வெற்றியினாலும், வீயா மெய் எலாம் மணிகளாக - பிறரால்
அழியாத உடல் முழுதும் நவமணிகளாகுமாறு, பொன்றிய கொடையினாலும் -
இறத்தலாலாகும் கொடையினாலும், என் போல் - என்னைப் போல, புகழ்
உடம்பு இரண்டு உண்டாமே - (அம்முனிவனுக்குப்) புகழுடம்பு இரண்டு
உள்ளனவோ - எ - று.

     ததீசி முனிவன் பெற்றது கொடையாலாகிய புகழொன்றே; யானோ
வென்றியினாலும் கொடையினாலும் இரு வகையான புகழினை எய்துதற்
குரியனானேன்; அவன் பெற்ற கொடைப் புகழ் ஒன்று தானும் ஓர் என்பை
ஒரு படைக்கலமாக ஒருவன் பெற அளித்தமையாலாயது; என் கொடைப்
புகழோ உடம்பின் எல்லா உறுப்புக்களும் ஒன்பது வகை மணிகளாக
எக்காலத்தும் யாவரும் பெறுமாறு அளிக்கும் கொடையாலாயது; எனத் தன்
புகழ்ப் பேற்றினை வியந்துரைத்தானென்க. ஒன்றிய கொடை - மனம்
பொருந்தியளித்த கொடை. பொன்றிய கொடை - பொன்றினமையாலாகிய
கொடை. உண்டாமே - உள்ளனவோ; ஏகாரம் எதிர்மறைப் பொருட்டு. (29)

மேவல னல்லை நீயே நட்டவன் மேலை வானோர்
யாவரு மருந்து மாற்றா லறம்புக ழெனக்கே யாக
ஆவுரு வாதி யென்றா யன்னதே செய்வே னென்றான்
ஈவதே பெருமை யன்றி யிரக்கின்ற திழிபே யன்றோ.

     (இ - ள்.) மேவலன் அல்லை - நீ எனக்குப் பகைவன் அல்லை; நீயே
நட்டவன் - நீயே நண்பன்; மேலை வானோர் யாவரும் அருந்தும் ஆற்றால்