I


மாணிக்கம் விற்ற படலம்671



- விண்ணுலகிலுள்ள தேவர்களனைவரும் உண்ணுமியல்பினால், அறம் புகழ்
எனக்கே ஆக - புண்ணியமும் புகழும் எனக்கு உளவாக, ஆ உரு ஆதி
என்றாய் - ஆனின் உருவாகி வருவாய் என்றாய், அன்னதே செய்வேன்
என்றான் - அங்ஙனமே செய்வேன் என்று கூறினான், ஈவதே பெருமை
அன்றி - (எஞ்ஞான்றும்) கொடுத்தலே பெருமையல்லாமல், இரப்பது இழிபே
அன்றோ - இரத்தல் இழிபல்லவா எ - று.

     எனக்கு அறமும் புகழும் உண்டாக இங்ஙனங் கூறினமையால் நீ
பகைவனல்லை நண்பனாவாய் என்றானென்க. நீ நண்பனே என ஏகாரத்தைப்
பிரித்துக் கூட்டலுமாம். மேற் செய்யுளில் நவமணிகளாதலால் எய்தும்
கொடைப் புகழைக் கூறி வைத்து, இச் செய்யுளில் தேவர் யாவரும்
அருந்துமாறளிக்கும் கொடையினையும் அதனாற் புகழேயன்றி அறமும்
உளதாதலையும் கூறினானென்க. யானொருவனே சிறப்பெய்தினேன் என்பான்:
'அறம்புகழ் எனக்கேயாக' என்றான். ஆதி - ஆவாய்; த் : எழுத்துப்பேறு,
இ: எதிர்கால விகுதி. ஈவதே பெருமையன்றி இரக்கின்றது பெருமையன்று;
அதன் மேலும் அஃது இழபேயாகும்; என விரித்துரைத்துக் கொள்க. ஈதல்
இரத்தல்களின் பெருமை சிறுமைகளை,

"நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினு மீதலே நன்று"            (திருக்குறள்-222)

என்னும் திருக்குறளானும்,

"ஈயென விரத்த லிழிந்தன்று....
கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன்று"

என்னும் புறப்பாட்டாலு மறிக. இது வேற்றுப்பொருள் வைப்பணி. (30)

அதற்கிசைந் தவுணர் வேந்த னமரர்வேந் தனைமுன் போக்கி
மதர்க்கடுங் குருதிச் செங்கண் மைந்தனுக் கிறைமை யீந்து
முதற்பெருங் கலையாம் வேத மொழிமர பமைந்த வானாய்ப்
புதர்க்கடு வேள்விச் சாலைப் புறத்துவந் திறுத்து நின்றான்.

     (இ - ள்.) அதற்கு இசைந்த அவுணர் வேந்தன் - அங்ஙனம் பசுவாய்
வர உடன்பட்ட அவுணர் தலைவனாகிய வலன், அமரர் வேந்தனை முன்
போக்கி - தேவர்க்கரசனாகிய இந்திரனை முன்னே அனுப்பி விட்டு, மதர்
கடுங் குருதிச் செங்கண் மைந்தனுக்கு இறைமை ஈந்து - மதர்த்த கொடிய
உதிரம்போற் சிவந்த கண்களையுடைய புதல்வனுக்கு அரசுரிமையைத் தந்து,
முதல் பெருங் கலையாம் வேதமொழி மரபு அமைந்த ஆனாய் -
கலைகட்கெல்லாம் முதன்மையாகிய பெரிய மறை நூலிற் கூறிய முறையே
இலக்கணமமைந்த பசுவாகி, புதர்க்கு அடுவேள்விச் சாலைப் புறத்து வந்து
இறுத்து நின்றான் - தேவர்கட்கு அவியுணவு ஆக்கும் வேள்விச்
சாலையின்கண் வந்து நிலைபெயராது நின்றான் எ - று.

     இசைந்தவென்னும் பெயரெச்சத்து அகரந்தொக்கது. இறைமை
இறையினது தன்மை; இறை - அரசன். மொழி மரபு - மொழிந்த முறைமை.
புதர் - தேவர்; புலவரென்னும் பொருட்டு. (31)