வாய்மையான் மாண்ட நின்போல் வள்ளல்யா ரென்று தேவர்
கோமகன் வியந்து கூறத் தருக்குமேற் கொண்டு மேரு
நேமியோ டிகலும் விந்த வரையென நிமிர்ந்து வேள்விக்
காமெனை யூபத் தோடும் யாமினென் றடுத்து நின்றான். |
(இ
- ள்.) வாய்மையால் மாண்ட நின்போல் - மெய்ம்மொழியால்
மாட்சிமைப்பட்ட நின்னைப் போல, வள்ளல் யார் என்று தேவர் கோமகன்
வியந்து கூற - வள்ளன்மையுடையார் யாவருளர் என்று தேவவேந்திரன்
வியந்து கூற, தருக்கு மேற்கொண்டு - செருக்கினை மேற்கொண்டு,
மேருநேமியோடு இகலும் விந்த வரை என - மேருமலையோடு பகைத்து
ஓங்கிய விந்தமலை போல, நிமிர்ந்து - உயர்ந்து, வேள்விக்கு ஆம் என -
வேள்விக்குப் பயன்படும் என்னை, யூபத்தோடும் யாமின் என்று அடுத்து
நின்றான் - யூபத் தம்பத்தோடுங் கட்டுங்கள் என்று அதனை அடுத்து
நின்றான் எ - று.
நேமி
- மலை. யூபம் - வேள்வித்தூண். யாமின் - பிணியுங்கள்; யா :
பகுதி. (32)
யாத்தனர் தருப்பைத் தாம்பா லூர்ணையால் யாத்த சிங்கப்
போத்தென நின்றான் வாயைப் புதைத்துயிர்ப் படங்க வீட்டி
மாய்த்தனர் மாய்ந்த வள்ளல் வலனுமந் தார மாரி
தூர்த்திட விமான மேறித் தொல்விதி யுலகஞ் சேர்ந்தான். |
(இ
- ள்.) தருப்பைத் தாம்பால் யாத்தனர் - தருப்பைக் கயிற்றாற்
கட்டி, ஊர்ணையால் யாத்த சிங்கப் போத்தென நின்றான் வாயைப் புதைத்து
- சிலம்பி நூலினாற் கட்டப்பட்ட ஆண் சிங்கம் போல நின்ற அவன்
வாயைப் பொத்தி, உயிர்ப்பு அடங்க வீட்டி மாய்த்தனர் - மூச்சு அடங்கக்
கொன்றனர்; மாய்ந்த வள்ளல் வலனும் - இறந்த வள்ளலாகிய வலனும்,
மந்தார மாரி தூர்த்திட - கற்பக மலர் மழை பொழிய, விமானம் ஏறித்
தொல்விதி உலகம் சேர்ந்தான் - விமானத்திலேறிப் பிரமன் உலகத்தை
அடைந்தான் எ - று.
தானாக
வாய்மையால் அடங்கி நின்றமை தோன்ற 'ஊர்ணையால்
யாத்த சிங்கப் போத்தென நின்றான்' என்றார். ஊர்ணை : மயக்க
விதியின்றேனும் வட சொல்லாகலின் அமையும். போத்து : ஆண்பால்
உணர்த்துஞ் சொல். வீட்டி வீழ்த்தி என்பதன் மரூஉ. வீட்டி மாய்த்தல் :
ஒரு பொருள் குறித்தன. வானோர் தூர்த்திட என விரித்துரைத்தலுமாம். பிரமன் பிதாமகன்
எனப்படுவனாகலின் 'தொல்விதி' என்றார். (33)
மணித்தலை
மலையின் பக்க மாய்த்தவன் வயிர வேலாற்
பிணித்துயிர் செகுத்த வள்ளற் பெருந்தகை யாவாய்* வேதம்
பணித்திடும் வபையை வாங்கிப் படரெரி சுவைமுன் பார்க்கக்
குணித்தவா னாடர்க் கூட்டிக் கோதிலா வேள்வி செய்தான். |
(பா
- ம்.) * பெருந்தகை யாவை.
|