I


மாணிக்கம் விற்ற படலம்673



     (இ - ள்.) மணித்தலை மலையின் பக்கம் மாய்த்தவன் - மணிகள்
பொருந்திய முடிகளையுடைய மலைகளின் சிறகை அரிந்த இந்திரன், பிணித்து
உயிர் செகுத்த வள்ளல் பெருந்தகை ஆவாய் - தூணிலே கட்டி உயிர்
போக்கப்பட்ட வள்ளன்மையும் பெருந்தகுதியுமுடைய வலனாகிய
ஆவினிடத்திருந்து, வயிர வேலால் வேதம் பணித்திடும் வபையை வாங்கி -
வச்சிரப் படையினால் வேதம் விதித்த வபையினை எடுத்து, படர் எரி சுவை
முன் பார்க்க - படர்ந்த வேள்வித் தீயானது முன்னே சுவை பார்க்க (இட்டு),
குணித்த வானாடர்க்கு ஊட்டி - கருதப்பட்ட தேவர்களுக்கு உண்பித்து,
கோது இலா வேள்வி செய்தான் - குற்றமில்லாத வேள்வியைச் செய்து
முடித்தான் எ - று.

     பக்கம் - சிறை; இது வடமொழியில் பக்ஷம் எனப்படும். ஆவாய் -
ஆவினிடத்து; வாய் : ஏழனுருபு. வபை - நிணம். வேலால் வாங்கியெனக்
கூட்டுக பார்க்க இட்டு என ஒரு சொல் வருவிக்க. குணித்த - மதிக்கப்பட்ட.
வானாடர்க்கு - தேவரை : உருபு மயக்கம். (34)

அத்தகை யாவின் சோரி மாணிக்க மாம்பன் முத்தம்
பித்தைவை டூய மென்பு வச்சிரம் பித்தம் பச்சை
நெய்த்தவெண் ணிணங்கோ மேதந் தசை துகிர் நெடுங்க ணீலம்
எய்த்தவை புருட ராக மிவைநவ மணியின் றோற்றம்.

     (இ - ள்.) அத்தகை ஆவின் சோரி மாணிக்கம் ஆம் - அந்தப்
பசுவினது குருதி மாணிக்கமாம்; பம் முத்தம் ஆம் - பற்கள் முத்தமாம்;
பித்தை வைடூயம் ஆம் - மயிர் வயிடூரியமாம்; என்பு வச்சிரம் ஆம் -
எலும்பு வயிரமாம்; பித்தம் பச்சை ஆம் - பித்தம் மரகதமாம்; நெய்த்த
வெள்நிணம் கோமேதம் ஆம் - நெய்ப்பினையுடைய வெள்ளிய நிணம்
கோமேதமாம்; தசை துகிர் ஆம் - தசை பவளமாம் : நெடுங்கண் நீலம்
ஆம் - நீண்ட கண்கள் நீலமாம்; எய்த்த ஐ புருடராகம் ஆம் - இளைத்தற்
கேதுவாகிய கோழை புருடராகமாம்; இவை நவமணியின் தோற்றம் -
இவையே நவமணிகள் தோன்றிய முறைமையாம் எ - று.

     ஆம் என்பதனை முத்தம் முதலியவற்றோடும் கூட்டுக. பச்சை -
மரகதம். எய்த்த - இளைத்தற்குக் காரணமான; ஐ - கபம். (35)

இவ்வடி வெடுத்துத் தோன்றி யிருண்முகம் பிளப்பக் காந்தி
தைவரு மணியொன் பானுஞ் சார்விட நிறங்கள் சாதி
தெய்வத மொளிமா செள்ளிச்*சோதனை செய்து தேசு
மெய்வர வணிவோ ரெய்தும் பயனிவை விதியாற் கேண்மின்.

     (இ - ள்.) இ வடிவு எடுத்துத் தோன்றி - இந்த உருவங்களை
யெடுத்துத் தோன்றி, இருள் முகம் பிளப்பக் காந்தி தைவரும் மணி
ஒன்பானும் - இருளின் முகம் பிளக்க ஒளிவீசும் ஒன்பது மணிகளும்,
சார்விடம் - பொருந்து மிடங்களும், நிறங்கள் - (அவற்றின்) நிறங்களும்,
சாதி - சாதியும், தெய்வதம் - தெய்வமும், ஒளி - ஒளியும், சோதனை செய்து
மாசு எள்ளி - ஆராய்ந்து குற்றங்களை நீக்கி (நல்லனவற்றை), தேசு மெய்வர
அணிவோர் எய்தும் பயன் - ஒளி பொருந்த உடலில் அணிகின்றவர்
    


     (பா - ம்.) * மாசெண்ணி.