அடையும் பயனும், இவை
விதியால் கேண்மின் - (ஆகிய) இவற்றை
முறைப்படி கேளுங்கள் எ - று.
இருள்
கெடுதலை 'இருள் முகம் பிளப்ப' என்றார். முகத்தைப்
பிளக்கவென இரண்டாம் வேற்றுமையாகக் கொள்ளுதலும் பொருந்தும்.
தேசுவர மெய் அணிவோர் என மாறுக. (36)
[- வேறு]
|
வாளவிரு மாணிக்கங்
கிரேதமுத லுகநான்கும் வழியே மக்கம்
காளபுரந் தும்புரஞ்சிங் களமிந்நான் கிடைப்படுமக் கமல ராகம்
ஆளுநிற மொன்பதர விந்தமா துளம்பூவித் தழல்கல் லாரங்
கோளரிய கச்சோத நரந்தநுறும் பலந்தீபங் கோப மென்ன. |
(இ
- ள்.) வாள் அவிரும் மாணிக்கம் - ஒளி விளங்கும்
மாணிக்கமானது, கிரேதம் முதல் உகம் நான்கும் - கிருதயுக முதல் நான்கு
உகங்களிலும், வழியே - முறையே, மக்கம் காளபுரம் தும்புரம் சிங்களம் இ
நான்கு இடைபடும் - மக்கமும் காளபுரமும் தும்புரமும் சிங்களமும் ஆகிய
இந்நான்கு இடங்களிலும் தோன்றும்; அ கமலராகம் ஆளும் நிறம் - அப்
பதுமராகம் ஆளா நின்ற நிறம், அரவிந்தம் - தாமரை மலரும், மாதுளம் பூ
- மாதுளை மலரும், வித்து - மாதுளை விதையும், அழல் - நெருப்பும்,
கல்லாரம் - செங்குவளை மலரும், கோள் அரிய கச்சோதம் - குற்றமற்ற
மின்மினிப் பூச்சியும், நரந்த நறும்பலம் - நாரத்தையின் நறியபழமும். தீபம்
- விளக்கும், கோபம் - இந்திர கோபமும், என்ன ஒன்பது - என ஒன்பது
வகையாம் எ - று.
கிருதயுகத்தில்
மக்கத்தினும், திரேதாயுகத்தில் காளபுரத்திலும், துவாபர
யுகத்தில் தும்புரத்திலும், கலியுகத்தில் சிங்களத்திலும் தோன்றுமென்க.
மாணிக்கத்திற்குப் பதுமராகமென்பது ஒரு பெயர். முன் குறிப்பிட்டு வந்த
பதிப்பொன்றிலே இது முதற் பல செய்யுட்கள் பாடம் மாறியும், பல
செய்யுட்கள் மிக்கும் உள்ளன. (37)
இந்நிறத்த பொதுவாய மாணிக்க
மறையவர்முன் னியனாற் சாதி
தன்னியல்பாற் சாதரங்கங் குருவிந்தஞ்
சௌகந்தி கங்கோ வாங்கம்
என்னுமிவற் றாற்சிறந்து நான்காகு
மிவ்வடைவே யிந்நான் கிற்குஞ்
சொன்னவொளி பத்திருநான் கிருமூன்று
நான்கவையுஞ் சொல்லக் கேண்மின். |
(இ
- ள்.) பொதுவாய இநிறத்த மாணிக்கம் - பொதுவாகிய
இவ்வொன்பது நிறங்களையுடைய மாணிக்கம், மறையவர் முன் இயல் நால்
சாதி தன் இயல்பால் - அந்தணர் முதலாகவமைந்த நான்கு சாதியாகி வழங்கு
மாற்றால், சாதரங்கம் குருவிந்தம் சௌகந்திகம் கோவாங்கம் என்னும்
இவற்றால் சிறந்து நான்கு ஆகும் - சாதாரங்கமும் குருவிந்தமும்
|