I


676திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



"சாதகப் புட்கண் டாமரை கழுநீர்
கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு
வன்னி மாதுளம் பூவிதை யென்னப்
பன்னு சாதுரங்க வொளிக்குணம் பத்தும்"

என்னும் கல்லாட அகவற் பகுதியினும் சாதுரங்க நிறத்துள் கார் கூறப்படாது
சாதகப் புள்ளின்கண் கூறப்பட்டிருத்தலும்;

"திலக முலோத்திரஞ் செம்பருத் திப்பூக்
கவிர்மலர் குன்றி முயலுதி ரம்மே
சிந்துரங் குக்கிற் கண்ணென வெட்டும்
எண்ணிய குருவிந்த மன்னிய நிறமே"

என்னும் நூற்பாவிலே, குருவிந்த நிறத்துள் செவ்வரத்தம், விதாரம் பொன்
என்பன வின்றிச், செம்பருத்திப்பூ, சிந்துரம், குக்கிற்கண் என்பனவும்,

"செம்பஞ் சரத்தந் திலக முலோத்திரம்
முயலின் சோரி சிந்துரங் குன்றி
கவிரல ரென்னக் கவர்நிற மெட்டும்"

என்னும் கல்லாடப் பகுதியிலே விதாரமும் பொன்னும் இன்றிச், செம் பஞ்சு,
சிந்துரம் என்பனவும் கூறப்பட்டிருத்தலும் அறியற்பாலன. (39)

களிதருசௌ கந்திகத்தி னிறமிலவம்
     போதுகுயிற் கண்ண சோகந்
தளிரவிர்பொன் செம்பஞ்சி யைவண்ண
     மெனவாறு தகுகோ வாங்க
ஒளிகுரவு குசும்பைமலர் செங்கல்கொவ்
     வைக்கனியென் றொருநான் கந்த
மிளிர்பதும ராகத்தைப் பொதுமையினாற்
     சோதிக்க வேண்டு மெல்லை.

     (இ - ள்.) களிதரு சௌகந்திகத்தின் நிறம் களிப்பைத் தருகின்ற
சௌகந்திகத்தின் நிறம், இலவம்போது குயிற்கண் அசோகந் தளிர் அவிர்
பொன் செம்பஞ்சி ஐவண்ணம் என ஆறு - இலவ மலரும் குயிலின்
கண்ணும் அசோகந்தளிரும் விளங்கும் பொன்னும் செம்பஞ்சியும் மரு
தோன்றியும் என ஆறு வகையாகும்; தகு கோவாங்க ஒளி - தக்க
கோவாங்கத்தின் ஒளி, குரவு குசும்பை மலர் செங்கல் கொவ்வைக் கனி்
என்று ஒரு நான்கு - குரா மலரும் குசும்பை மலரும் செங்கல்லும்
கொவ்வைக் கனியும் என்று ஒரு நான்கு வகையாகும்; அந்த மிளிர் பது
மராகத்தைப் பொதுமையினால் சோதிக்க வேண்டும் எல்லை - அந்த
விளக்கமுள்ள மாணிக்கத்தைப் பொதுவாக ஆராய வேண்டுமிடத்து எ - று.