ஐவண்ணம் - மருதோன்றி.
"கோகிலக்கண்
செம்பஞ்சு கொய்ம்மலர்ப் பலாசம்
அசோகப் பல்லவம் அணிமலர்க் குவளை
இலவத் தலர்க ளென்றாறு குணமும்
சௌகந் திக்குச் சாற்றிய நிறனே" |
என்னும் நூற்பாவில்,
சௌகந்திகத்தின் நிறத்துள் பொன், ஐவண்ணம்
என்பனவின்றிப், பலாசம், குவளை என்பனவும்,
"அசோகப்
பல்லவம் அலரிசெம் பஞ்சு
கோகிலக் கண்ணீ ளிலவலர் செம்பெனத்
தருசௌ கந்தி தன்னிற மாறும்" |
என்னும் கல்லாடத்தில்
பொன், ஐவண்ணம் என்பன வின்றிச் செம்பு, அலரி
என்பனவும் கூறப்பட்டிருத்தலும்;
"கோவைநற் செங்கல்
குராமலர் மஞ்சளெனக்
குங்கும மஞ்சிற் கோவாங்கு நிறமும்" |
என்னும் கல்லாடத்தில்,
குசும்பை மலரின்றி மஞ்சள் கூறிக் குங்குமம் ஒன்று
மிகுதியாகக் கூறப்பட்டிருத்தலும் அறியற்பாலன. (40)
திண்ணியதாய் மேல்கீழ்சூழ் பக்கமுற
வொளிவிடுதல் செய்தாற் செவ்வே
அண்ணியவுத் தமமுதன்மூன் றாமென்பர்
சாதரங்க மணிவோர் விச்சை
புண்ணியவான் கன்னியறு சுவையன்ன
முதலான புனித தானம்
பண்ணியதும் பரிமேத யாகமுதன்
மகம்புரிந்த பயனுஞ் சேர்வர். |
(இ
- ள்.) திண்ணியது ஆய் மேல் கீழ் சூழ் பக்கம் உற ஒளி விடுதல்
செய்தால் - திட்பமுடையதாய் மேலும் கீழும் சுற்றுப் பக்கமுமாகிய இவற்றில்
ஒளி வீசினால், செவ்வே - முறையே, அண்ணிய உத்தமம் முதல் மூன்று
ஆம் - பொருந்திய உத்தமம் முதலிய மூன்று வகைப்படும், என்பர் - என்று
கூறுவர்; சாதரங்கம் அணிவோர் - சாதரங்கத்தினை அணிகின்றவர்கள்,
விச்சை புண்ணிய ஆன் கன்னி அறுசுவை அன்னம் முதலான புனித தானம்
பண்ணியதும் - கல்வியும் அறவடிவாகிய பசுவும் கன்னியும் அறுசுவையமைந்த
உண்டியும் முதலான தூய தானஞ் செய்த பயனையும், பரிமேத யாகம் முதல
மகம் புரிந்த பயனும் - பரி வேள்வி முதலிய பல வேள்விகளைப் புரிந்த
பயனையும், சேர்வர் - அடைவர் எ - று.
மேலே
ஒளி விடில் உத்தமம், கீழே ஒளி விடில் அதமம், பக்கத்தில்
ஒளி விடில் மத்திமம் என்க. பண்ணியது - பண்ணிய பயன். (41)
|