கால்
சீத்து - அடியுடன் கெடுத்து; ஒரு சொல்லுமாம். பதும ராகமது;
அது : பகுதிப் பொருள் விகுதி. தம் : சாரியை. ஆல், ஓ : அசைகள்.
மாணிக்கத்தின் குற்றம் பதினாறு எனவும், குணம் பன்னிரண்டு எனவும்
கூறப்படும் : அதனை,
"மாணிக் கத்தியல்
வகுக்குங் காலைச்
சமனொளி சூழ்ந்த விருநான் கிடமும்
நால்வகை வருணமு நவின்றவிப் பெயரும்
பன்னிரு குணமும் பதினறு குற்றமும்
இருபத் தெண்வகை யிலங்கிய நிறமும்
மருவிய விலையும் பத்தி பாய்தலும்
இவையென மொழிப வியல்புணர்ந் தோரே" |
என்னும் பழைய நூற்பாவால்
அறிக. (43) - வேறு
பிறநிறச் சார்பு புள்ளி புள்ளடி பிறங்கு கீற்று
மறுவரு* தராச மென்ன வகுத்தவைங் குற்றந் தள்ளி
அறைதரு பண்பு சான்ற வரதன மணியும் வேந்தன்
செறுநர்வா ளூற்ற மின்றிச் செருமகட் கன்ப னாவான். |
(இ
- ள்.) பிறநிறச் சார்பு - (அவ்வவற்றிற்குரிய நிறமொழிந்த) வேறு
நிறம் பொருந்தலும், புள்ளி - விந்துவும், புள் அடி - காக பாதமும், பிறங்கு
கீற்று - விளங்குகின்ற தாரையும், மறு வரு தராசம் - குற்றம் பொருந்திய
ஒளி சலித்தலும், என்ன வகுத்த ஐங்குற்றம் தள்ளி - என்று பாகுபாடு செய்த
ஐந்து குற்றங்களையும் ஒழித்து, அறைதரு பண்பு சான்ற அரதனம் அணியும்
வேந்தன் - (அவ்வவற்றிற்குக்) கூறிய குணம் நிறைந்த மணிகளை அணிகின்ற
மன்னன், செறுநர்வாள் ஊற்றம் இன்றி - பகைவரது வாளினால்
இடையூறில்லாமல், செருமகட்கு அன்பன் ஆவான் - வீரமகளுக்குத்
தோழனாவான் எ - று.
சரை
மலம், கீற்று, சம்படி, பிளத்தல், துளை, கரு, விந்து, காக
பாதகம், மிருத்து, கோடியில்லன, கோடி முரிந்தன, தாரை மழுங்கல், கருகல்,
வெள்ளை, கல், மணல், பரிவு, தார், சாயையிறுகுதல், கருப்பத் துளை,
கல்லிடை முடங்கல், திருக்கு என்பன வாதியாகக் குற்றங்கள் பலவாகும்;
அவற்றுள், ஐந்து குற்றங்களைப் பொது வகையால் ஈண்டெடுத்துக் கூறினார்.
புள்ளடி - காகபாதம்; புள் - காக்கை. ஊற்றம் - ஊறு; அம் :
பகுதிப்பொருள் விகுதி. (44)
குறுநிலக்
கிழவ னேனு மவன்பெருங் குடைக்கீழ்த் தங்கி
மறுகுநீர் ஞால மெல்லாம் வாழுமற் றவனைப் பாம்பு
தெறுவிலங் கலகை பூதஞ் சிறுதெய்வம் வறுமை நொய்தீக்
கறுவுகொள் கூற்றச் சீற்றங் கலங்கிட வாதி யாவாம். |
(பா
- ம்.) * மறுவுறு.
|