I


680திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) குறுநிலக் கிழவனேனும் - (இம்மணிகளை யணிபவன்)
குறுநில மன்னாயினும், அவன் பெருங் குடைக்கீழ் - அவனது பெரிய குடை
நிழலின் கீழ், மறுகு நீர் ஞாலம் எல்லாம் தங்கி வாழும் - கடல் சூழ்ந்த
உலகமனைத்தும் பொருந்தி வாழும்; பாம்பு தெறு விலங்கு அலகை பூதம் சிறு
தெய்வம் வறுமை நோய் தீ - பாம்பும் கொல்லும் விலங்குகளும் பேயும்
பூதமும் சிறு தெய்வங்களும் மிடியும் நோயும் நெருப்பும், கறுவுகொள் கூற்றச்
சீற்றம் - கறுவுதலைக் கொண்ட கூற்றின் சினமும், கலங்கிட அவனை
வாதியா - கலக்கமடையும்படி அவனைத் துன்புறுத்த மாட்டா எ - று.

     மறுகுதல் - சுழலுதல், மறுகு நீர் - கடல்; ஆகுபெயர். தெறு விலங்கு
- கொலைத் தொழிலையுடைய விலங்கு; சிங்கம் புலி முதலியன. மற்று, ஆம்
என்பன அசைகள். (45)

முன்னவ ரென்ப கற்றோர் வச்சிர முந்நீர் முத்தம்
மன்னவ ரென்ப துப்பு மாணிக்கம் வணிக ரென்ப
மின்னவிர் புருட ராகம் வயிடூயம் வெயிற்கோ மேதம்
பின்னவ ரென்ப நீல மரகதம் பெற்ற சாதி.

     (இ - ள்.) கற்றோர் - கற்று வல்லோர், பெற்ற சாதி - பொருந்திய
சாதி வகையால், வச்சிரம் முந்நீர் முத்தம் முன்னவர் என்ப - வயிரத்தையும்
கடலிற்றோன்றிய முத்தையும் அந்தணர் என்று கூறுவர்; துப்பு மாணிக்கம்
மன்னவர் என்ப - பவளத்தையும் மாணிக்கத்தையும் அரசரென்று கூறுவர்;
மின் அவிர் புருடராகம் வயிடூயம் வெயில் கோமேதம் வணிகர் என்ப - மின்
போல விளங்கும் புருட ராகத்தையும் வயிடூரியத்தையும் ஒளி பொருந்திய
கோமேதகத்தையும் வணிகர் என்று கூறுவர்; நீலம் மரகதம் பின்னவர் என்ப
- நீலத்தையும் மரகதத்தையும் சூத்திரரென்று கூறுவர் எ-று.

     பொருந்திய சாதி வகையால் என விரித்துத் தனித்தனி கூட்டுக.
வெண்மை முதலிய நிறம்பற்றி வயிரம் முதலியவற்றை அந்தணர் முதலிய
சாதியுட்படுத்துக் கூறுவது புனைந்துரை வகையாயதொரு வழக்கு. (46)

பார்த்திவர் மதிக்கு முத்தம் பளிங்கன்றிப் பச்சை தானுஞ்
சாத்திகந் துகிர்மா ணிக்கங் கோமேதந் தாமே யன்றி
மாத்திகழ் புருட ராகம் வயிடூயம் வயிரந் தாமும்
ஏத்திரா சதமா நீலந் தாமத மென்ப ராய்ந்தோர்.

     (இ - ள்.) ஆய்ந்தோர் - நூல்களை ஆராய்ந்தோர், பார்த்திவர்
மதிக்கும் முத்தம் - அரசர்கள் மதிக்கின்ற முத்தும், பளிங்கு - பளிங்கும்,
அன்றி - இவையல்லாமல், பச்சை தானும் - மரகதமும், சாத்திகம் - சாத்துவிக
குணமுடையனவாம், துகிர் மாணிக்கம் கோமேதம் - பவளமும் மாணிக்கமும்
கோமேதமும், அன்றி இவையல்லாமல், மாதிகழ் புருடராகம் வயிடூயம் வயிரம்
தாமும் - பெருமை விளங்கும் புருடராகமும் வயிடூரியமும் வயிரமும், ஏத்து
இராசதம் ஆம் - பலரும் போற்றும் இராசத குணம் உடையனவாம், நீலம் -
நீலமானது, தாமதம் - தாமத குணம் உடையதாம், என்பர் என்று கூறுவர்
எ - று.