I


மாணிக்கம் விற்ற படலம்681



     நவமணிகளின் வேறாய பளிங்கும் இதிற் கூறப்பட்டது. சாத்திகம்
சாத்விகம் என்பதன் திரிபு, சாத்துவிகம் முதலிய குணவகை சிறிது
வேறுபடக்கூறுவாருமுளர். தான், தாம், ஏ என்பன அசைகள். (47)

இனையவை யளந்து கண்டு மதிக்குநா ளெழுமான் பொற்றேர்
முனைவனாண் முதலா வேழின் முறையினாற் பதும ராகங்
கனைகதிர் முத்தந் துப்புக் காருடம் புருட ராகம்
புனையொளி வயிர நீல மென்மனார் புலமை சான்றோர்.

     (இ - ள்.) இனையவை அளந்து கண்டு மதிக்கும் நாள் -
இம்மணிகளை ஆராய்ந்து பார்த்து மதிப்பிடும் நாட்கள், எழுமான் பொன்
தேர் முனைவன் நாள் முதலா - ஏழு குதிரைகளைப் பூட்டிய பொன்னாலாகிய
தேரினையுடைய சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமை முதலாக, ஏழின்
முறையினால் - ஏழு கிழமைகளின் முறையே, பதுமராகம் கனைகதிர் முத்தம்
துப்பு காருடம் புருடராகம் - பதுமராகமும் செறிந்த ஒளியினையுடைய
முத்தும் பவளமும் பச்சையும் புருடராகமும், புனை ஒளி வயிரம் நீலம் -
அழகிய ஒளியினையுடையய வயிரமும் நீலமும் (என்பவற்றிற்குரியன),
என்மனார் புலமை சான்றோர் - என்று கூறுவர் அறிவின் மிக்க பெரியோர்
எ - று.

     நாள் முறையினால் உரியனவென விரித்து முடிக்க. காருடம் - பச்சை.
(48)

வெய்யவன் கிழமை தானே மேதக மணிக்கு மாகும்
மையறு திங்க டானே வயிடூய மணிக்கு மாகும்
ஐயற விவையொன் பானு மாய்பவ ரகம்பு றம்பு
துய்யரா யறவோ ராய்மு சொன்னநா ளடைவே யாய்வர்.

     (இ - ள்.) வெய்யவன் கிழமை தானே - ஞாயிற்றுக் கிழமையே, மேதக
மணிக்கும் ஆகும் - கோமே தக மணிக்கும் உரியதாகும்; மை அறு திங்கள்
தானே - குற்றமற்ற திங்கட்கிழமையே, வயிடூய மணிக்கும் ஆகும் - வயிடூரிய
மணிக்கும் உரியதாகும்; இவை ஒன்பானும் ஐயம் அற ஆய்பவர் - இவை
ஒன்பது மணிகளையும் ஐயுறவு நீங்க ஆராய்பவர். அகம் புறம்பு துய்யராய் -
உள்ளும் புறமும் தூய்மையுடையவராய். அறவோராய் - அறநெறியிற்
செல்பவராய், முன் சொன்ன நாள் அடைவே ஆய்வர் - முன் கூறிய
கிழமைகளில் முறையே ஆராயக் கடவர் எ - று.

     பதுமராகத்திற்குக் கூறிய ஞாயிற்றுக் கிழமையே கோமேதகத்திற்கும்,
முத்திற்குக் கூறிய திங்கட்கிழமையே வயிடூரியத்திற்கும் ஆகுமென்றார்.
கோமேதகம் என்பது முதற்குறையாய் நின்றது. ஐயமற என்பது ஐயற எனத்
தொகுத்தல் விகாரமாயிற்று. அகமும் புறம்பும் என விரிக்க. ஆய்வர் -
ஆயக்கடவரென்க. (49)

அல்லியம் பதுமஞ் சாதி யரத்தவா யாம்பல் கோடல்
வல்லிசேர் மௌவற் போது நூற்றிதழ் மரைகா லேயம்*
மெல்லிதழ்க் கழுநீர் பேழ்வாய் வெள்ளைமந் தார மின்ன
சொல்லிய முறையால் வண்டு சூழத்தன் முடிமேற் சூடி.

     (பா - ம்.) * மரைகள் வாய.