கேண்மின் - நிறுத்த
முறையே சொல்லக் கேளுங்கள் எ - று.
விரிந்த
முகமுடையது என்னும் பொருளில் சிங்கத்திற்குப் பஞ்சானனம்
என்பது ஒரு பெயர்; பஞ்ச என்பது ஐந்து எனவும் பொருள்படுமாகலின்
சொல் நோக்கி 'ஐவாய்' எனக் கூறினார்; இங்ஙனம் மொழி
பெயர்த்தலுண்டென்பது 'குஞ்சர நகரம்' முதலியவற்றாலறிக. அவை தங்கட்கு
என்க. (54)
மாடவெண் புறவின்முட்டை வடிவெனத்திரண்ட பேழ்வாய்*
கோடுகான் முத்தம் வெள்ளை நிறத்தன+ கொண்மூ முத்தம்
நீடுசெம் பரிதி யன்ன நிறத்தது கிளைமுத் தாலிப்
பீடுசா னிறத்த ராவின் பெருமுத்த நீலத் தாமால். |
(இ
- ள்.) மாடப் புறவின் வெள்முட்டை வடிவு எனத் திரண்ட மாடப்
புறவின் வெள்ளிய முட்டையின் வடிவினைப் போலத் திரட்சி வாய்ந்த,
பேழ்வாய் - பிளந்த வாயினையுடைய இப்பியும், கோடு - சங்கும், கால் -
ஈன்ற, முத்தம் - முத்தங்கள், வெள்ளை நிறத்தன - வெள்ளை நிறத்தினை
யடையன; கொண்மூ முத்தம் நீடு செம்பரிதி அன்ன நிறத்தது - முகிலீன்ற
முத்து மிக்க செந்நிறம் வாய்ந்த சூரியனை ஒத்த நிறத்தினையுடையது;
கிளைமுத்து - மூங்கிலீன்ற முத்து, ஆலிப் பீடுசால் நிறத்து - மழைக் கட்டி
போலப் பெருமை நிறைந்த நிறத்தினையுடையது; அராவின் பெரு முத்தம் -
பாம்பீன்ற பெரியமுத்து, நீலத்து ஆம் - நீல நிறத்தினையுடையதாகும் எ-று.
பேழ்வாய்
- பிளந்த வாயையுடையது என இப்பிக்குக் காரணக் குறி.
கோடு - சங்கு. கிளை - மூங்கில். ஆலி - ஆலங்கட்டி; மழை பெய்யும்
பொழுது விழும் நீர் திரண்ட கட்டி; ஆலம் - நீர். நிறத்தது நீலத்தது
என்பன நிறத்து நீலத்து என விகாரமாயின. ஆல், அசை. (55)
ஏனமா வாரஞ் சோரி யீர்ஞ்சுவைச் சாலி முத்தம்
ஆனது பசுமைத் தாகும் பாதிரி யனைய தாகும்
மீனது தரளம் வேழ மிரண்டினும் விளையு முத்தந்
தானது பொன்னின் சோதி தெய்வதஞ் சாற்றக் கேண்மின். |
(இ
- ள்.) ஏனம் மா ஆரம் சோரி - பன்றிக் கொம்பின்
பெருமையுடைய முத்தானது குருதியினிறத்தினையுடையது; ஈர் சுவைச் சாலி
முத்தம் ஆனது பசுமைத்து ஆகும் - தண்ணிய சுவையினையுடைய
வெண்ணெல்லின் முத்தம் பசிய நிறத்தினையுடையது; மீனது தரளம் பாதிரி
அனையதாகும் - மீன்றலையின் முத்தம் பாதிரி மலர் போலும்
நிறத்தினையுடையது; வேழம் இரண்டினும் விளையும் முத்தம் - யானைக்
கொம்பும் கரும்பும் ஆகிய இவ்விரண்டினும் உண்டாகின்ற முத்துக்கள்,
பொன்னின் சோதி - பொன்னின் நிறத்தினையுடையன; தெய்வதம் சாற்றக்
கேண்மின் - அவ்வம் முத்தங்களுக்குரிய தெய்வங்களையும் கூறக்
கேளுங்கள் எ - று.
(பா
- ம்.) * பேழ்வாய்க்கோடு. +வெள்ளை நிறத்தது.
|