உடு
- விண்மீன். மூதணங்கு - மூதேவி. குற்றங்களாவன - காற்றேறு,
மணலேறு, கல்லேறு, நீர்நிலை என்பன முதலாயின;
"காற்றினு
மண்ணினுங் கல்லினு நீரினும்
தோற்றிய குற்றந் துகளறத் துணிந்தவும்
சந்திர குருவே அங்கா ரகனென
வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்" |
என்னும் சிலப்பதிகாரத்து
ஊர்காண் காதை யடிகளும், அவற்றின் உரையும்
நோக்குக. (58)
மாசறு தவத்தோ
னென்பும் வலாசுர னென்பும் வீழ்ந்த
கோசல மாதி நாட்டிற் பட்டது குணத்தான் மாண்ட
தேசதா யிலேச தாகித் தெள்ளிதா யளக்கி னெல்லை
வீசிய விலைய தாகி மேம்படு வயிரந் தன்னை. |
(இ
- ள்.) மாசு அறு தவத்தோன் என்பும் - குற்றமற்ற தவத்தினை
யுடைய ததீசி முனிவன் முதுகந் தண்டெலும்பும், வலாசுரன் என்பும் -
வலாசுரனுடைய எலும்பும், வீழ்ந்த கோசலம் ஆதி நாட்டில் - சிந்திய கோசல
முதலிய நாட்டினில், பட்டது - தோன்றி, குணத்தால் மாண்ட தேசது ஆய் -
குணங்களால் மாட்சிமைப்பட்ட விளக்கமுடையதாய், இலேசது ஆகி -
(கையால் எடுப்பின்) இலேசாய், தெள்ளிதாய் - சருச்சரையகன்றதாய்,
அளக்கின் எல்லை வீசிய விலையது ஆகி - (விலையை) வரையறுத்தால்
அளவு கடந்த விலையையுடையதாகி, மேம்படு வயிரும் தன்னை - சிறந்த
வயிரத்தை எ - று.
பட்டது
- தோன்றியதாய்; எச்சம். எல்லை வீசிய - அளவினைப்
போக்கிய.
"வைராகர மேருப்
பிமவா னேம கூடம்
துங்கசவாலக்க மவந்திக மாதங்கந் தொகுமருண
மெனுமெட்டா கரமேதோற்றம்" |
என வயிரம் தோன்றுமிடம்
எட்டென்பர் பெரும்பற்றப்புலியூர்நம்பி.
'குணத்தால் மாண்ட' எனவே குற்றமின்மையுங் கொள்க;
"சரைமலங்
கீற்றுச் சம்படி பிளத்தல்
துளைகரி விந்து காக பாதம்
இருத்துக் கோடிக ளிலாதன முரிதல்
தாரை மழுங்கல் தன்னோ
டீராறும் வயிரத் திழிபென மொழிப" |
என்பதனால் வயிரத்தின்
குற்றம் பன்னிரண்டு எனவும்;
"காகபாதமுங்
களங்கமும் விந்துவு மேகையு நீங்கி" |
என்னும் சிலப்பதிகார
அடிகளாலும்,
|