மலம்பிரி யாதது நிலந்தரு கிளைகெடும்"
"விந்து சிந்தையிற் சந்தா பந்தரும்"
"கீற்று வரலினை யேற்றவர் மாய்வர்" |
என்னும் நூற்பாக்களாலும்
அவற்றுள் மிக்க குற்றம் நான்கு எனவும்.
"பலகை யெட்டுங் கோண மாறும்
இலகிய தாரையுஞ் சுத்தியுங் தராசமும்
ஐந்துங் குணமென் றறைந்தனர் புலவர்
இந்திர சாபத் திகலொளி பெறினே" |
என்பதனால் வயிரத்தின்
குணம் ஐந்து எனவும் அறியப்படுகின்றன. (59)
குறுநிலத் தரசுந் தாங்கிற் குறைவுதீர் செல்வ மெய்தி
உறுபகை யெறிந்து தன்கோன் முழுதுல கோச்சிக் காக்கும்
வறுமைநோய் விலங்கு சாரா வரைந்தநா ளன்றிச் செல்லுங்
கறுவுகொள் கூற்றம் பூதங் கணங்களு மணங்கு செய்யா. |
(இ
- ள்.) குறுநிலத்து அரசும் தாங்கின் - குறுநில மன்னனும்
(இதனை) அணியில், குறைவுதீர் செல்வம் எய்தி - குறைவற்ற செல்வத்தை
அடைந்து, உறுபகை எறிந்து - மிக்க பகைவரை அழித்து தன்கோல் உலகு
முழுதும் ஓச்சிக் காக்கும் - தனது செங்கோல் உலக முழுதுஞ் செல்ல
நடாத்திக் காப்பான்; வறுமை நோய் விலங்கு சாரா - (அவ்வரசனை வருத்த)
வறுமையும் பிணியும் விலங்குகளும் அடையாவாம்; வரைந்த நாள் அன்றிச்
செல்லும் கறுவுகொள் கூற்றம் - வரையறுத்த நாளிலல்லாமல் இடையில்
வரும் சினங்கொண்ட கூற்றமும், பூதம் கணங்களும் அணங்கு செய்யா -
பூதங்களும் பேய்களும் துன்பம் செய்யமாட்டா எ - று.
உறு
- மிக்க : உரிச்சொல்; உறுகின்ற பகையென வினைத்
தொகையுமாம். முழுது - எஞ்சாமைப் பொருட்டு. உலகு முழுதும் என மாறுக.
கூற்றமும் பூதமும் என உம்மை விரிக்க. அணங்கு - வருத்தம். (60)
மாமணி மரபுக் கெல்லாம் வயிரமே முதன்மைச் சாதி
ஆமென வுரைப்பர் நூலோ ரதிகம்யா தென்னி னேனைக்
காமரு மணிகட் கெல்லாந் தமரிடு கருவி யாமத்
தூமணி தனக்குந் தானே துளையிடுங் கருவி யாகும். |
(இ
- ள்.) நூலோர் - மணி நூலாராய்ச்சி வல்லுநர், மாமணி மரபுக்கு
எல்லாம் வயிரமே முதன்மைச் சாதி ஆம் என உரைப்பர் - பெருமை
பொருந்திய மணிகளின் மரபுகளுக்கெல்லாம் வயிரமே முதற் சாதியாம் என்று
கூறுவர்; அதிகம் யாது என்னில் - அம் முதன்மை எதனாலென்னில், அ
தூமணி - அந்தத் தூய்மையுடைய வயிரமணி, ஏனை காமரு மணிகட்கு
எல்லாம் தமர் இடு கருவியாம் - மற்றைய விருப்பம் பொருந்திய
மணிகளனைத்திற்கும் தொளையிடுங் கருவியாகும் (அன்றி), தனக்குத் தானே
|