துளை இடும் கருவியாகும்
- தனக்கும் தானே தொளை செய்யும் கருவியாகும்
(ஆதலின்) எ - று.
'நவமணிகளுள்
வயிரமே எல்லாவற்றினுஞ் சிறந்ததாகும்; கோமேதகமும்,
பவழமும் எல்லாவற்றினும் தாழ்ந்தனவாகும்; மரகதமும், மாணிக்கமும்,
முத்தும் தலையாய மணிகளாம்; இந்திர நீலமும், புட்பராகமும், வைடூரியமும்
இடையாய மணிகளாகும்.' என்று சுக்கிர நீதியிற்
கூறப்பட்டுளது. வயிரம்
எல்லாவற்றினும் திட்பமுடைத்தென்பது கூறப்பட்டது;
"வயிர வூசியு மயன்வினை யிரும்பும்
செயிரறு பொன்னைச் செம்மைசெ யாணியும்
தமக்கமை கருவியுந் தாமா மவைபோல்
உரைத்திற முணர்த்தலு முரையது தொழிலே" |
என்னும் சூத்திரம்
இங்கு நோக்கற் பாலது. (61)
மரகதத் தோற்றங் கேண்மின் வலாசுரன் பித்தந் தன்னை
இரைதமக் காகக் கௌவிப் பறந்தபுள் ளீர்ந்தண் டில்லித்
தரைதனிற் சிதற வீழ்ந்து தங்கிய தோற்ற மாகும்
உரைதரு தோற்ற மின்னும் வேறுவே றுள்ள கேண்மின். |
(இ
- ள்.) மரகதத் தோற்றம் கேண்மின் - மரகதத்தின்
தோற்றத்தினைக் கேளுங்கள்; வலாசுரன் பித்தந்தன்னை - வலாசுரன்
பித்தத்தை, இரை தமக்காகக் கௌவிப் பறந்த புள் - தமக்கு உணவாகக்
கௌவிப் பறந்த கலுழன், ஈர்தண் டில்லித் தரையினில் சிதற வீழ்ந்து தங்கிய
தோற்றம் ஆகும் - மிக்க தண்ணிய டில்லி நாட்டிற் சிதறலால் வீழ்ந்து
தங்கிய (இடங்களில்) தோற்றமாகும்; உரைதரு தோற்றம் - சொல்லப்படும்
தோற்றங்கள், இன்னும் வேறு வேறு உள்ள கேண்மின் - இன்னம் வெவ்வேறு
உள்ளன கேளுங்கள் எ - று.
'வலனுடைய
வயிற்றின் புறத்தைக் கொத்தி விழுங்கிய கருடன்
நகைத்தலானுமிழ, அஃது இமவான் முதலிய பன் மலைகளினும் ஊறிப்
பிறத்தலிற் கருடோற்காரம் என்று பெயர் பெற்ற மரகதச் சாதி' என்று
அடியார்க்கு நல்லார் கூறுவர். (62)
விதிர்த்தவே லனைய வாட்கண் வினதைமா தருணச் செல்வன்
உதிர்த்தவான்முட்டையோட்டை உவணவேற்றயில்யாப்பக்
கதிர்த்தவோ டரையிற் றப்பி வீழ்ந்தொரு கடல்சூழ் வைப்பில்
உதித்தவா றாகு மின்னு முண்டொரு வகையாற் றோற்றம். |
(இ
- ள்.) விதிர்த்த வேல் அனைய வாள் கண் வினதை மாது -
அசைத்தலுடைய வேல் போன்ற ஒளி பெற்ற கண்ணையுடைய வினதை
என்பாள், அருணச் செல்வன் உதித்தவால் முட்டை ஓட்டை - அருணன்
உதித்த வெள்ளிய முட்டையின் ஓட்டினை, உவண ஏற்று அரையில் யாப்ப
- கருடனது அரையிற் கட்ட, கதிர்த்த ஓடு அரையில் தப்பி வீழ்ந்து ஒரு
கடல் சூழ்வைப்பில் உதித்தவாறு ஆகும் - விளங்கிய வோடானது அதன்
|