I


மாணிக்கம் விற்ற படலம்689



அரையினின்றும் தவறி வீழ்ந்து ஒரு கடல் சூழ்ந்த நிலத்தில் உதித்த விதம்
ஒன்றாம்; இன்னும் ஒரு வகையால் தோற்றம் உண்டு - இன்னும் ஒரு
வகையினாலும் தோற்றம் உண்டு எ - று.

     வினதை : தக்கன் புதல்வி; காசிபன் மனைவி; அருணனுக்கும்
கலுழனுக்கும் தாய். அருணச் செல்வன் - அருணனாகிய புதல்வன்.
வைப்பில் வீழ்தலால் உதித்த வாறாகும் என்க. (63)

முள்ளரை முளரிக் கண்ணன் மோகினி யணங்கா யோட
வள்ளரை மதியஞ் சூடி மந்தர வரைமட் டாகத்
துள்ளரி யேறு போலத் தொடர்ந்தொரு விளையாட் டாலே
எள்ளரி தாய செந்தீ யிந்தியக் கலனஞ் செய்தான்.

     (இ - ள்.) முள் அரை முளரிக் கண்ணன் - முட்கள் பொருந்திய
நாளத்தினையுடைய தாமரையின் மலர்போலும் கண்களையுடைய திருமால்,
மோகினி அணங்காய் ஓட - மோகினிப் பெண் வடிவாகி ஓட, வள் அரை
மதியம் சூடி - அழகிய பாதி மதியினைச் சடையிற் சூடிய சிவபெருமான், ஒரு
விளையாட்டால் - ஒரு திருவிளையாட்டாக, மந்தர வரை மட்டு ஆக -
மந்தரமலையின் எல்லையளவாக, துள் அரி ஏறு போலத் தொடர்ந்து சென்று,
எள் அரிதாய செந்தீ இந்தியக் கலனம் செய்தான் - பழிப்பில்லாத சிவந்த
தீயாகிய இந்திரியத்தைச் சிந்தினான் எ - று.

     மதியம், அம் : சாரியை. சூடி - அணிந்தவன்; இ : வினை முதற்
பொருள் விகுதி, காமனை முனிந்த கண்ணுதற் பெருமான் இங்ஙனம் புரிந்தது
ஒரு விளையாட்டே என்றார். இறைவனுக்கு இந்திரியமாவது செந்தீ என்பது
நூற் கொள்கை. (64)

அப்பொழு தமல வித்தி லரிகர குமரன் கான
வைப்புறை தெய்வத் தோடும் வந்தன னந்த விந்து
துப்புறு கருடன் கௌவிக் கடலினுந் துருக்க நாட்டும்
பப்புற விடுத்த வாறே பட்டது கலுழப் பச்சை.

     (இ - ள்.) அப்பொழுது அமலவித்தில் அரிகர குமரன் -
அக்காலையில் தூய அவ்விந்தில் ஐயன் என்பான், கான வைப்பு உறை
தெய்வத்தோடும் வந்தனன் - காட்டிலுறையும் பரிவார தெய்வங்களோடும்
வந்தனன்; அந்த விந்து - அந்த விந்தினை, துப்பு உறு கருடன் கௌவி -
வலமிக்க கருடன் கௌவி, கடலினும் துருக்க நாட்டும் பப்பு உற
விடுத்தவாறே - கடலிலும் துருக்க நாட்டிலும் பரவ விடுத்த வழியே, கலுழப்
பச்சை பட்டது - கலுழப் பச்சை தோன்றியது எ - று.

     வித்து - விந்து. அரிகர குமரன் - திருமாலுக்கும் சிவனுக்கும் பிறந்த
புதல்வன்; ஐயனார்; மகா சாத்தா. பப்புற - பம்புதலுற. ஐயனார் தோன்றிய
வரலாறு,

"இந்த வண்ண மிருக்க முராரியும்
அந்தி வண்ணத் தமலனு மாகியே