முந்து கூடி முயங்கிய
வேலையில்
வந்த னன்னெமை வாழ்விக்கு மையனே" |
|
"அத்த குந்திரு
மைந்தற் கரிகர
புத்தி ரன்னெனு நாமம் புனைந்துபின்
ஒத்த பான்மை யுருத்திரர் தம்மொடும்
வைத்து மிக்க வரம்பல நல்கியே" |
எனக் கந்தபுராணத்துட்
கூறப்படுதல் காண்க. (65)
காடமே சுப்பிரமே
காளமெனக்
குணமூன்றாங் கருடப் பச்சைக்
கீடறுகி னிதழ் நிறத்த காடமது
சாதியினா லிருவே றாகுஞ்
சாடரிய சகுணமெனச் சதோடமென
வவையிரண்டிற் சகுண மாறாம்
பீடுபெறு காடமொடு முல்லசிதம்
பேசலம் பித்தகமே முத்தம். |
(இ
- ள்.) கருடப் பச்சைக்குக் காடமே சுப்பிரமே காளமெனக் குணம்
மூன்றாம் - கருடப் பச்சை என்னும் மரகதத்திற்குக் காடம் என்றும் சுப்பிரம்
என்றும் காளம் என்றும் குணங்கள் மூன்று வகையாம், ஈடு அறுகின் இதழ்
நிறத்த காடமது - பெருமை பொருந்திய அறுகினிதழ் போலும்
நிறத்தையுடைய காடமானது, சாடு அரிய சகுணமெனச் சதோடமெனச்
சாதியினால் இரு வேறு ஆகும் - கெடுதலில்லாத சகுணம் எனவும் சதோடம்
எனவும் சாதியினால் இரண்டு வகைப்படும்; அவை இரண்டில் -
அவ்விரண்டினில், பீடுபெறு காடமொடும் உல்லசிதம் என பேசலம் என
பித்தகம் என முத்தம் என - பெருமை பொருந்திய காடமொடு உல்லசிதம்
எனவும் பேசலம் எனவும் பித்தகம் எனவும் முத்தம் எனவும் எ - று.
ஏ
என என்பன எண்ணிடைச் சொற்கள். காடமது, அது : பகுதிப்
பொருள் விகுதி. சகுணம் ஆறாம் என்பது வருஞ் செய்யுளிற் கூட்டி
முடிக்கப்படும். (66)
புல்லரிய பிதுகமென விவையாறிற்
காடமது புல்லின் வண்ணம்
உல்லசித மெலிதாகும் பேசலமே
குளச்செநெலொண் டரளம் போலும்
அல்லடரும் பித்தகமே பசுங்கிளியின்
சிறைநிறத்த தாகு முத்தங்
குல்லைநிறம் பிதுகமரை யிலையினிறஞ்
சதோடத்தின் குணனைந் தாகும். |
|