(இ
- ள்.) புல் அரிய பிதுகம் என - அடைதற்கரிய பிதுகம் எனவும்,
சகுணம் ஆறாம் - சகுணம் ஆறு வகைப்படும்; இவை ஆறில் -
இவ்வாறனுள், காடமது புல்லின் வண்ணம் ஆகும் - காடமானது புல்லைப்
போன்று பசிய நிறமுடையதாம்; உல்ல சிதம் மெலிது ஆம் - உல்லசிதம்
மென்மைத் தன்மையுடையதாம்; பேசலம் குளச் செந்நெல் ஒண்தரளம்
போலும் - பேசலமானது குளநீரால் விளையும் செந்நெற் பயிரிற்றோன்றிய
ஒள்ளிய முத்துப் போலும் பசிய நிறத்தினையுடையதாம்; அல் அடரும்
பித்தகமே பசுங்கிளியின் சிறை நிறத்தது ஆகும் - இருளை ஓட்டும்
பித்தகமானது பசிய சிறையின் நிறத்தினையுடையதாம்; முத்தம் குல்லை நிறம்
- முத்தமானது துளவத்தி னிறத்தினையுடைய தாம்; பிதுகம் மரை இலையின்
நிறம் - பிதுகமானது தாமரை இலையின் நிறத்தினையுடையதாம்; சதோடத்தின்
குணன் - சதோடத்தின் குணங்கள் எ - று.
மரை
: முதற்குறை. ஐந்தாகும் என்பது வருஞ்செய்யுளிற் கூட்டி
முடிக்கப்படும். (67)
தோடலே சாஞ்சிதமே துட்டமே
தோடமூர்ச் சிதமே வெய்ய
தோடலே சத்தினொடு சூழ்மந்த
தோடமெனத் தொகுத்த வைந்தில்
தோடலே சாஞ்சிதஞ்சம் பிரவிலையா
மலரியிலை துட்ட நீலத்
தோடதாம் புல்லினிறந் தோடமூர்ச்
சிதமுளரி தோட லேசம். |
(இ
- ள்.) தோடலே சாஞ்சிதமே துட்டமே தோட மூர்ச்சிதமே -
தோடலே சாஞ்சிதம் எனவும் துட்டம் எனவும் தோட மூர்ச்சிதம் எனவும்,
வெய்ய தோடலே சத்தினொடு சூழ் மந்த தோடம் என - வெவ்விய
தோடலேசம் எனவும் நீங்காத மந்த தோடம் எனவும், ஐந்து ஆகும் - ஐந்து
வகைப்படும்; தொகுத்த ஐந்தில் - தொகுத்துக் கூறிய சதோடமைந்தினுள்,
தோடலே சாஞ்சிதம் சம்பிர இலையாம் - தோடலே சாஞ்சிதமானது
எலுமிச்சையிலையின் நிறத்தினையுடையதாம்; துட்டம் - துட்டமானது, அலரி
இலை - அலரியிலையின் நிறத்தையும், நீலத்தோடது ஆம் -
கருங்குவளையின் இதழ் நிறத்தையும் உடையதாம்; தோட மூர்ச்சிதம் புல்லின்
நிறம் - தோட முர்ச்சிதமானது புல்லின் நிறத்தினையுடையதாம்; தோடலேசம்
முளரி - தோடலேசமானது தாமரையிலையின் நிறத்தினையுடையதாம் எ - று.
தோடமூர்ச்சிதமானது
நீலத்தோடாகிய புல்லின் நிறம் என்னலுமாம். (68)
மந்ததோ டங்கலப மயிலிறகி
னிறமாமிவ் வகுத்த தோடஞ்
சிந்தவா னாதகுண மணியணிவோர்
நாற்கருவிச் சேனை வாழ்நாள் |
|