I


692திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



உந்தவாழ் வார்வலகை ணீலமிரண்
     டரன்கண்டத் தொளிவிட் டோங்கும்
இந்திரநீ லந்தான்மா நீலமென
     வேறிரண்டுண் டிந்த நீலம்.*

     (இ - ள்.) மந்ததோடம் கலகமயில் இறகின் நிறமாம் - மந்த
தோடமானது கலாபத்தையுடைய மயிலிறகின் நிறத்தினையுடையதாம்;
இவ்வகுத்த தோடம் சிந்தகுணம் ஆனாதமணி அணிவோர் - இங்கு வகுத்துக்
கூறிய குற்றம் நீங்க (முன் கூறிய) குணத்தினின்றும் நீங்காத மரகதத்தை
அணிகின்றவர், நாற்கருவிச் சேனை வாழ்நாள் உந்த வாழ்வார் - நான்கு
கருவியாகிய தானையொடு வாழ்நாளும் பெருக வாழ்வார்; வலன்கண் நீலம்
இரண்டு - வலனுடைய இரு கண்களாகிய நீலம் இரண்டு உண்டு; இந்த நீலம்
- இந்நீலத்தில், அரன் கண்டத்து ஒளி விட்டு ஓங்கும் இந்திர நீலம் -
சிவபெருமான் திருமிடற்றைப் போல் ஒளி விட்டு விளங்கும் இந்திர நீலம்
எனவும், மாநீலம் என - மாநீலம் எனவும், வேறு இரண்டு உண்டு - வேறு
இரண்டு வகை எ - று.

"கருகுதல் வெள்ளை கல்மணல் கீற்று
பரிவுதார் சாயை யிறுகுதல் மரகதத்
தெண்ணிய குற்ற மிவையென மொழிப"

என்பதனால் மரகதத்தின் குற்றம் எட்டு எனவும்,

"ஏகையு மாலையு மிருளொடு துறந்த"

என்னும் சிலப்பதிகார அடியால் அவற்றுள் மிக்க குற்றம் மூன்று எனவும்,

"நெய்த்த மயிற்கழுத் தொத்தபைம் பயிரிற்
பசுத்தல் பொன்மை தன்னுடன் பசுத்தல்
வக்கி பாய்தல் பொன்வண்டின் வயி
றொத்துத் தெளிதலோ டெட்டுங் குணமே"

என்பதனால் மரகதத்தின் குணம் எட்டு எனவும் அறியப்படுகின்றன. (69)

முந்தியவிந் திரநீலம் விச்சுவரூ
     பனைமகவான் முடித்த நாளின்
நந்தியடு பழிதவிர்ப்பான் புரியுமகப்
     பரிமகத்தி னறிய தூமம்
உந்தியரும் பரியிமையா நாட்டநுழைந்
     தளிசேற்றி னொழுகும் பீளை
சிந்தியவாற் றிடைப்படுமொன் றிந்திரவின்
     னீலமெனத் திகழு நீலம்.

     (பா - ம்.) * இன்னுநீலம்.