(இ
- ள்.) முந்திய இந்திர நீலம் - முன்னர்க் கூறிய இந்திர நீலமானது,
விச்சுவரூபனை மகவான் முடித்த நாளில் - விச்சுவவுருவனை இந்திரன்
கொன்ற பொழுது, நந்தி அடு பழி தவிர்ப்பான் - வளர்ந்து வருத்தும்
பழியினை நீக்கும் பொருட்டு, புரியும் மகம் - செய்த வேள்வியாகிய,
பரிமகத்தின் நறிய தூமம் - புரவி வேள்வியில் எழுந்த நறுமணமுடைய
புகையானது, உந்தி அரும் பரி இமையா நாட்டம் நுழைந்து - ஓங்கி அரிய
குதிரையின் இமையாத கண்ணுள் நுழைதலால், அளி சேற்றின் - இளகிய
சேற்றைப் போல, ஒழுகும் பீளை சிந்திய ஆற்றிடைப் படும் - ஒழுகிய
பீளையானது சிதறிய இடத்தினின்றும் தோன்றும்; நீலம் - இந்நீலமானது,
இந்திரவில் ஒன்று நீலம் எனத் திகழும் - இந்திர வில்லிற் பொருந்திய நீல
நிறம் போல விளங்கா நிற்கும் எ - று.
விச்சுவவுருவனைக்
கொன்ற வரலாற்றை இந்திரன் பழிதீர்த்த படலத்திற்
காண்க. நந்தி - பெருகி. மகப்பரிமகம் என்பதற்குப் பெரிய அசுவமேதம்
என்றுரைப்பாருமுளர். உந்தி - தாவி. (70)
சஞ்சையாம் பகற்கடவுண் மனைவியவன்
கனலுடலுந் தழுவ லாற்றா
தஞ்சுவா டன்னிழலைத் தன்னுருவா
நிறுவிவன மடைந்து நோற்க
விஞ்சையா லறிந்திரவி பின்றொடர
மாப்பரியா மின்னைத் தானுஞ்
செஞ்செவே வயப்பரியாய் மையல்பொறா
திந்தியத்தைச் சிந்தி னானே. |
(இ
- ள்.) சஞ்சை ஆம் பகல் கடவுள் மனைவி - சஞ்சை என்னும்
பெயரையுடைய சூரியன் மனைவியானவள், அவன் கனல் உடலம் தழுவல்
ஆற்றாது அஞ்சுவாள் - அவனது தழல் வடிவத்தைத் தழுவுதற்குப் பொறாமல்
அஞ்சுவாளாகி, தன் நிழலைத் தன் உருவா நிறுவி - தனது உடல் நீழலைத்
தனது வடிவாக நிறுத்தி, வனம் அடைந்து நோற்க - காட்டிற் சென்று
தவஞ்செய்ய, விஞ்சையால் இரவி அறிந்து - (அதனை) ஞானத்தாற் சூரியன்
உணர்ந்து, பின்தொடர - பின் தொடர்ந்து செல்ல, மாப்பரி ஆம் மின்னை -
(அப்பொழுது) பெருமை பொருந்திய பெண் குதிரை வடிவாகி (ஓடிய)
மனைவியை, தானும் செஞ்செவே வயப் பரியாய் - அச்சூரியனும் செவ்வனே
அமைந்த ஆண் குதிரை வடிவாய் (ப்பின் சென்று), மையல் பொறாது
இந்தியத்தைச் சிந்தினான் - காமம் பொறுக்கலாற்றாது இந்திரியத்தைச்
சிந்தினான் எ - று.
சஞ்சையாம்
மனைவியென்க. நிழலுருவின் பெயர் சாயாதேவி. நோற்க
வென்னும் எச்சம் தொடரவென்பதையும், தொடரவென்னும் எச்சம் ஆம்
என்பதனையும் கொள்ளும். தானும் பரியாய்த் தொடர்ந்து என விரித்துரைக்க.
செஞ்செவே - மிகச்செவ்வே. (71)
அவைசிதறும் புலந்தோன்று நீலமா
நீலமிவை யணிவோர் வானோர்
நவையறுசீர் மானவரிந் நகைநீலஞ்
சாதியினா னால்வே றந்தக் |
|