கவலரிய வெள்ளைசிவப் பெரிபொன்மை
கலந்திருக்கிற் கரிதாய் முற்றுந்
தவலரிதா யிருக்கிலிரு பிறப்பாளர்
முதன்முதனாற் சாதிக் காகும். |
(இ
- ள்.) அவை சிதறும் புலம் தோன்றும் நீலம் மாநீலம் - அவ்
விந்திரியங்கள் சிந்திய இடங்களிற்றோன்றும் நீலம் மாநீலமாகும்; இவை
அணிவோர் வானோர் நவை அறுசீர் மானவர் - இம்மணிகளை அணிபவர்
தேவர்களும் குற்றமற்ற சிறப்பினையுடைய மக்களுமாவர்; இ நகை நீலம்
சாதியினால் நால்வேறு - இவ்வொளியுள்ள மாநீலமானது சாதியினால் நான்கு
வகையாகும்; அந்தக் கவல் அரிய வெள்ளை சிவப்பு எரி பொன்மை
கலந்திருக்கில் - (பிறிதொன்று) பற்றுதலில்லாத அந்த வெண்மையும் சிவப்பும்
விளங்கும் பொன்மையும் கலந்திருக்கினும், கரிதாய் முற்றும் தவல் அரிதாய்
இருக்கில் - முற்றும் கரியதாய்க் கெடுதலில்லாததாய் இருக்கினும், இரு
பிறப்பாளர் முதல் - அந்தணர் முதல், முதல் நால் சாதிக்கு ஆகும் -
முதன்மையையுடைய நான்கு வருணத்திற்கும் உரியதாகும் எ - று.
கவல்
- கவ்வுதல்; பிறிதொன்று பற்றுதல். வெண்மை கலந்தால்
அந்தணனும், செம்மை கலந்தால் அரசனும், பொன்மை கலந்தால் வைசியனும்,
முற்றும் கரிதாகில் சூத்திரனும் ஆம் என்க. சாதிக்காகும் - சாதி
எனப்படுதற்குரியவாகும். சிலப்பதிகாரத்து
ஊர்காண் காதையுரையில்,
"நீலத் தியல்பு
நிறுக்குங் காலை
நால்வகை வருணமு நண்ணு மாகரமும்
குணம்பதி னொன்றுங் குறையிரு நான்கும்
அணிவோர் செயலு மறிந்திசி னோரே" |
|
"வெள்ளை சிவப்புப்
பச்சை கருமையென்
றெண்ணிய நாற்குலத் திலங்கிய நிறமே" |
|
"கோகுலக் கழுத்துக்
குவளை சுரும்பர்
ஆகுலக் கண்க ளவிரிச் சாறு
காயா நெய்தல் கனத்தல் பத்தி
பாய்த லெனக்குணம் பதினொன் றாமே" |
என அடியார்க்கு
நல்லார் எடுத்துக்காட்டிய நூற்பாக்கள் இங்கு
அறியற் பாலன. (72)
இலங்கொளிய விந்நீல மெய்ப்படுப்போர்
மங்கலஞ்சேர்ந் திருப்பா ரேனை
அலங்குகதிர் நீலத்திற் பெருவிலையா
யிரப்பத்தி னளவைத் தாகித் |
|