துலங்குவதான் பாற்கடத்தி னூறுகுணச்
சிறப்படைந்து தோற்றுஞ் சோதி
கலங்குகட லுடவைப்பி லரிதிந்த
விந்திரன்பேர்க் கரிய நீலம். |
(இ
- ள்.) இலங்கு ஒளிய இ நீலம் - விளங்குகின்ற ஒளியினையுடைய
இந்நீல மணிகளை, மெய்ப்படுப்போர் மங்கலம் சேர்ந்து இருப்பார் -
அணிகின்றவர்கள் நலங்களெய்தியிருப்பர்; ஏனை அலங்கு கதிர் நீலத்தின்
பெருவிலை ஆயிரப்பத்தின் அளவைத்து ஆகி - மற்றை விளங்கா நின்ற
ஒளியினையுடைய மா நீலத்தினும் பதினாயிர மடங்காகிய பெரிய விலையினை
உடையதாகி, துலங்குவது - விளங்குவதாகிய, இந்த இந்திரன் பேர்க்கரிய
நீலம் - இந்த இந்திர நீலம், ஆன்பால் கடத்தின் - ஆனின்பால் நிறைந்த
குடத்தில் இட்டால், நூறுகுணம் சிறப்பு அடைந்து சோதி தோற்றும் -
(அப்பால் நிறத்தைக் கீழ்ப்படுத்தி) நூறு மடங்கு தன் குணம் மேம்பட்டு ஒளி
தோன்றச் செய்யும்; கலங்கு கடல் உடைவைப்பில் அரிது - (இஃது)
ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இந்நிலவுலகில் அரியதாகும் எ - று.
மெய்ப்படுத்தல்
- மெய்யின்கட் சேர்த்தல்; அணிதல். ஏனை அலங்கு
கதிர் நீலம் என்றது இந்திரநீல மென்னில் 'நீலத்தின் பெருவிலை'
என்றிருத்தல் வேண்டும். ஊறுகுணம் எனப் பிரித்து, மேம்பட்டுச் சுரக்கின்ற
குணம் என்றலுமாம். சோதி தோற்றுவது மாநீலம் என்றுரைப்பாருமுளர்.
சீவகசிந்தாமணியிலே "கருமணியம் பாலகத்துப்
பதித்தன்ன படிலாய்"
என்பதன் குறிப்பாகக் 'கருமணியைப் பாலிற் பதித்தால் பால்நிறங்
கெடுமென்றுணர்க' என நச்சினார்க்கினியர் கூறியிருப்பது
இங்கு
நினைக்கற்பாலது. (73)
மைந்துறுசெம் மணிமுத்து வாள்வயிரம்
பச்சையொளி வழங்கு நீலம்
ஐந்திவைமேற் கோமேத முதற்பவள
மீறாக வறைந்த நான்கும்
நந்தொளிய வேனுமவை சிறுவேட்கை
பயப்பவழ னகுசெங் குஞ்சி
வெந்தறுகண் வலனிணங்கள் சிதறுமிடைப்
படுவனகோ மேத மென்ப. |
(இ
- ள்.) மைந்து உறு செம்மணி முத்து வாள் வயிரம் பச்சை ஒளி
வழங்கும் நீலம் ஐந்து இவைமேல் - வன்மை மிக்க மாணிக்கமும் முத்தும்
ஒளி பொருந்திய வயிரமும் மரகதமும் ஒளியைக் கொடுக்கும் நீலமும் ஆகிய
இவ்வைந்தின் மேல், கோமேத முதல் பவளம் ஈறாக அறைந்த நான்கும் -
கோமேதகம் முதலாகப் பவளம் இறுதியாகக் கூறிய நான்கு மணிகளும், நந்து
ஒளியவேனும் - மிக்க ஒளியினையுடையவேனும், அவை - அம் மணிகள்,
சிறுவேட்கை பயப்ப - சிறிய விலையுள்ளன; அழல் நகு செங்குஞ்சி
வெந்தறுகண் வலன் நிணங்கள் சிதறு மிடை - நெருப்பைப் போலும்
விளங்காநின்ற சிவந்த சிகையையும் கொடிய அஞ்சாமையையும்
|