I


696திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



உடைய வலனுடைய நிணங்கள் சிந்திய இடத்தில், கோமேதம் படுவன
என்ப - கோமேதகங்கள் தோன்றுவன என்பர் எ - று.

     இதுகாறும் கூறியவற்றைச் சுட்டி 'ஐந்திவை' என்றார். நான்கு -
கோமேதகம், புருடராகம், வைடூரியம், பவளம் என்பன. வேட்கை விருப்பம்;
ஈண்டு விலை. (74)

உருக்குநறு நெய்த்துளிதேன் றுளிநல்லான்
     புண்ணியநீ ரொத்துச் சேந்து
செருக்குபசும் பொன்னிறமும் பெற்றுமெலி
     தாய்த்தூய்தாய்த் திண்ணி தாகி
இருக்குமது தரிக்கினிருட் பாவம்போம்
     பரிசுத்தி யெய்தும் வென்றித்
தருக்குவலன் கபம்விழுந்த விடைப்புருட
     ராகமொளி தழையத் தோன்றும்.

     (இ - ள்.) உருக்கும் நறு நெய்துளி - உருக்கிய நறிய நெய்த்துளியும்,
தேன் துளி - தேன்றுளியும், நல் ஆன் புண்ணிய நீர் ஒத்துச் - சேந்து நல்ல
பசுவின் கோசலமும் ஆகிய இவற்றை ஒத்துச் சிவந்து, செருக்கு பசும்பொன்
நிறமும் பெற்று - உயர்ந்த பசிய பொன்னிறத்தையும் பெற்று, மெலிதாய்
தூய்தாய் திண்ணிதாகி - சருச்சரை அகன்றதாய்த் தூயதாய்த் திண்ணியதாய்,
இருக்குமது தரிக்கின் - இருக்கின்ற கோமேதகத்தை அணிந்தால்,
இருட்பாவம்போம் - கருமையாகிய பாவம் நீங்கும்; பரிசுத்தி எய்தும் -
புனிதம் வந்து பொருந்தும்; வென்றித்தருக்கு வலன் கபம் விழுந்த இடை -
வெற்றிச் செருக்கினையுடைய வலனது கபம் விழுந்த விடத்தினின்றும்,
புருடராகம் ஒளி தழையத் தோன்றும் - புருடராகமணி ஒளிமிகத் தோன்றும்
எ - று.

     புண்ணிய நீர் - கோசலம். மாற்றுயர்ந்த பொன்னைச் 'செருக்கு
பசும்பொன்' என்றார். இருட்பாவம் - அஞ்ஞானத்தாலாகிய பாவம் என்றும்,
நிரயத்திற் கேதுவாகிய பாவம் என்றும் கூறலுமாம். 'மஞ்சளும் சிவப்பும்
கலந்தாலொத்த நிறத்தையுடைய கோமேதக வருக்கமும்' என்பர் அடியார்க்கு
நல்லார்.
(75)

தாழ்ந்தபிலத் திழிந்தெரிபொற் கண்ணவுண
     னுயிர்குடிக்குந் தறுகட் பன்றி
போழ்ந்தமுழை வாய்திறந்து திசைசெவிடு
     படநகைத்துப் பொன்போற் கக்கி
வீழ்ந்தகபம் படுதிவிற் படுமுச்சி
     வட்டமாய் மெலிதாய்ப் பொன்போற்
சூழ்ந்தொளிவிட் டவிர்தழல்போற் றெளிவெய்தி
     மனங்கவர்ந்து தோற்றஞ் செய்யும்.