I


மாணிக்கம் விற்ற படலம்697



     (இ - ள்.) தாழ்ந்த பிலத்து இழிந்த எரிபொற்கண் அவுணன் உயிர்
குடிக்கும் - ஆழ்ந்த பாதலத்தில் (பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு)
சென்றொளித்த இரணியாக்கன் என்னும் அவுணனது உயிரைப் பருகிய,
தறுகண் பன்றி போந்த முழைவாய் திறந்து - அஞ்சாமையையுடைய
(திருமாலாகிய) பன்றி தனது பிளந்த குகை போன்ற வாயினைத் திறந்து,
திசை செவிடுபட நகைத்துக் கக்கி - திக்குகள் செவிடாம்படி நகைத்துக்
கக்குதலால். பொன் போல் வீழ்ந்து கபம் படு தீவில் படும் - பொன்னைப்
போற் சிதறி வீழ்ந்த கபம் பொருந்திய தீவிலும் உண்டாகும்; உச்சி வட்டமாய்
மெலிதாய் - (அது) உச்சியில் வட்ட வடிவாய் மென்மையுடையதாய், பொன்
போல் அவிர் தழல் போல் சூழ்ந்து ஒளிவிட்டு - பொன் போலும் விளங்கும்
தீப்போலும் சுற்றிலும் ஒளி வீசி, தெளிவு எய்தி மனங்கவர்ந்து தோற்றஞ்
செய்யும் - தெளிவு பொருந்திக் கண்டோர் மனத்தைக் கவர்ந்து பொலியும்
எ - று.

     இழிந்த என்பதன் அகரம் தொக்கது; இழிந்து உயிர் குடிக்கும் எனப்
பன்றிக்கேற்றி உரைத்தலுமாம். பொற்கண்ணன் - இரணியாக்கன்;
இரணியனுக்குத் தமையன். இரணியாக்கன் புவியைப் பாய்போற் சுருட்டிப்
பாதலத்திற் புக்கொளிக்கத், திருமால் வெள்ளைப் பன்றி யுருவெடுத்துச்
சென்று அவனைக் கொன்று, தமது கோட்டின் நுதியால் புவியைப்
பண்டுபோற் கொணர்ந்து நிறுத்தினர் என்பது வரலாறு. கக்குதலால் பொன்
போல் வீழ்ந்த என விரித்துரைக்க. தீவிலும் படும் என இறந்தது தழுவிய
எச்சவும்மை விரித்துரைக்க. தோற்றஞ் செய்யும் - விளங்கும். (76)

இந்தமணி பாரியாத் திரகிரியிற்
     கொடுமுடியா யிலங்குந் தெய்வ
மந்தரமால் வரைப்புறஞ்சூழ் மேகலையா
     மயனிந்த மணியி னாலே
அந்தரநா டவனகரு மரசிருப்பு
     மண்டபமு மமைத்தா னிந்தச்
சந்தமணி தரிப்பவரே தரியார்வெந்
     நிடவாகை தரிக்க வல்லார்.

     (இ - ள்.) இந்த மணி பாரியாத்திர கிரியின் கொடு முடியாய் இலங்கும்
- இந்த மணியானது பாரியாத்திர மலையின் சிகரமாய் விளங்கும்; தெய்வ
மந்தர மால் வரைப் புறம்சூழ் மேகலையாம் - தெய்வத் தன்மை பொருந்திய
பெரிய மந்தர மலையின் புறத்திற் சூழ்ந்த மேகலையாகவும் விளங்கும்; மயன்
இந்த மணியினாலே - தெய்வத் தச்சன் இந்த மணியினாலே, அந்தர நாடவன்
நகரும் அரசு இருப்பு மண்டபமும் அமைத்தான் - தேவேந்திரனது
நகரத்தையும் அவன் அரசு வீற்றிருக்கு மண்டபத்தையும் ஆக்கினான்; இந்தச்
சந்தமணி தரிப்பவரே - இந்த அழகிய புருடராகமணியை அணிபவரே,
தரியார் வெந் இட வாகை தரிக்க வல்லார் - பகைவர் புறங்கொடுக்க வெற்றி
மாலை தரிக்க வல்லராவர் எ - று.

     புருடராகமானது பூசத்தினது உருவினையுடைய பொன்னை மாசறத்
தெளிய வைத்தாலொத்தது எனச் சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டுள்ளது. (77)