நிறம்
யாதென்னில் கழையிலை மயிலெருத்தம் வெருகின்கண்
என்னுமிவற்றின் நிறம் என முடித்துப், பின், அஃது அந்நிறத்தாய்க்
கனத்ததாகித் தெளிதாகித் திண்ணிதாய் மெலிதாகி விளங்கும் என்றுரைத்துக்
கொள்க. தெளிது தெள்ளிது. இதனில் எனற்பாலது ஈதில் என நின்றது.
அறவோர் - அந்தணர் என்னும் பொருட்டு. வைடூரியமானது ஞாயிற்றின்
ஒளியும், தேன்றுளியும் போலுமெனச் சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டுளது. (79)
வலத்தவுணன்
றசைவீழ்ந்த வழிப்படுதுப்
ப*யன்சந்தி வடிவ மாத்தென்
புலத்தவரை விதிக்குமிடத் தவனுடன்மா
சிழிபுலத்தும் புயல்போல் வண்ணன்
வலத்தமது கைடவரைக் குறைகுருதி
வழிநிலத்தும் மகவான் வெற்பின்
குலத்தையிற கரிசோரி சிதறிடத்தும்
வந்துகுடி கொண்டு தோன்றும். |
(இ
- ள்.) வலத்தவுணன் தசை வீழ்ந்த வழிப்படு துப்பு -
வலனென்னும் அவுணனது தசை வீழ்ந்த இடத்துத் தோன்றிய பவளம், அயன்
சந்தி வடிவமாதென் புலத்தவரை விதிக்குமிடத்து - பிரமன் சந்திக்கால
வடிவமாக விருந்து தென்புலத்தவரைப் படைக்கும்பொழுது, அவன் உடல்
மாசு இழி புலத்தும் - அவனது உடலின் அழுக்கு வீழ்ந்த இடத்திலும், புயல்
போல் வண்ணன் - முகில் போலும் நிறத்தினையுடைய திருமால், வலத்த மது
கைடவரைக் குறை குருதி வழி நிலத்தும் - வலியினையுடைய மது
கைடவர்களைச் சேதித்த குருதி ஒழுகிய இடத்திலும், மகவான் - இந்திரன்,
வெற்பின் குலத்தை இறகு அரிசோரி சிதறு இடத்தும் - மலையின்
கூட்டத்தைச் சிறகு அரிந்த குருதி சிதறிய இடத்திலும், வந்து குடி கொண்டு
தோன்றும் - வந்து குடி கொண்டு விளங்கும் எ - று.
வலனாகிய
அவுணனை 'வலத்தவுணன்' என்றார். பிரமன் பிதிரரைப்
படைக்கும் பொருட்டுக் கொண்ட உடலை விடுத்த பொழுது சந்திக்காலம்
ஆகலின் அவனுடல் சந்தியெனப்படும் என்று புராணங் கூறும். மதுகைடவர் -
மதுவும் கைடவனும் : உம்மைத்தொகை. அயன் உந்தித் தாமரையில் இருக்க
அரி திருப்பாற் கடலில் அறிதுயில் கொள்ளும் பொழுது அவருடைய இரு
செவிகளிலுமிருந்து மது கைடவன் என்னும் அசுரர் இருவர் தோன்றி
அண்டங்கள் நடுங்க உலவும்பொழுது பிரமன் துணுக்கமுறத் திருமால்
'அஞ்சேல்' எனக் கூறி, விட்டுணு, சிட்டுணு என்று இருவரைப் படைத்து ஏவ,
அவர்கள் மதுகைடவரைக் கொன்றனர் என்று கூர்ம புராணங் கூறும். (80)
அவ்வழியிற்
படுபவள முருக்கம்பூப்
பசுங்கிளிமூக் கலர்ந்த செவ்விச்
செவ்வரத்த மலர் கொவ்வைக் கனிபோலுங்
குணங்குற்றந் திருகிக் கோடல் |
(பா
- ம்.) * வழிபடுந்துப்பு.
|