I


கடவுள் வாழ்த்து7



திருவருள் போற்றி - திருவருள் காக்க, குன்று ஏறு உள்ளே இருந்து -
வெள்ளி மலைபோலும் இடபத்தின்கண் அமர்ந்து; காட்சி கொடுத்தருள் -
தரிசனம் தந்தருளுகின்ற, சோலம் போற்றி - திருவுருவம் காக்க; மன்று
உள்ளே - வெள்ளி மன்றத்தின் கண், மாறி ஆடும் - கால் மாறி
நடித்தருளுகின்ற, மறைச் சிலம்பு - வேதமாகிய சிலம்பினை யணிந்த,
அடிகள் போற்றி - திருவடிகள் காக்க எ - று.

     புலன் - சுவை முதலியன : ஈண்டு அவற்றின்மேற் செல்கின்ற
அவாவினை உணர்த்துகின்றது. பொறிகள் புறத்தின்கண்ணவேனும் ஆசை
அகத்தே நிகழ்தலின் ‘உள்ளே புலன்’ எனப்பட்டது; ‘ஐவரை யகத்தே
வைத்ர்’ என்பது ஆளுடைய அரசுகள் திருவாக்கு. அமுதம் என்றது
சிவானந்தத்தை; அது தேனென்றும் பிறவாறும் கூறப்படுவதுண்டு;
‘அனைத்தெலும் புண்ணெக வானந்தத் தேன் சொரியும் - குனிப்புடையான்’
என்பது மாணிவாசகம். குன்றுளே என்பதில் உள் ஏழனுருபு. போற்றி -
காக்க என வேண்டிக்கோடற் பொருடரும் வியங்கோள் வினைமுற்று; நம
என்பது போல் வணக்கம் என்னும் பொருளதுமாம்; பரவப்படுக என்னும்
பொருள் பயக்கதுமாம். இப்பாட்டு விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர்
என்னும் மூவகை உயிர்கட்கும் முறையே அருளுமுறைமை குறிக்கின்றது
எனவும் கூறுவர். (3)

               ச த் தி

               [வேறு]

சுரும்புமுரல் கடிமலர்ப்பூங் குழல்போற்றி
     யுத்தரியத் தொடித்தோள் போற்றி
கரும்புருவச் சிலைபோற்றி கவுணியர்க்குப்
     பால்சுரந்த கலசம் போற்றி
இரும்புமனங் குழைத்தென்னை யெடுத்தாண்ட
     வங்கயற்க ணெம்பி ராட்டி
அரும்புமின நகைபோற்றி யாரணநூ
     புரஞ்சிலம்பு மடிகள் போற்றி.

     (இ - ள்.) சுரும்பு முரல் - வண்டுகள் ஒலிக்கின்ற, கடிமல் -
வாசனை பொருந்திய மலலை யணிந்த, பூங்குழல் போற்றி - அழகிய கூந்தல்
காக்க; உத்தரியம் தொடி - உத்தரியத்தையும் வளையலையும் அணிந்த,
தோள் போற்றி - திருத்தோள்கள் காக்க; கரும்புருவம் சிலை போற்றி -
கரிய புருவங்களாகிய விற்கள் காக்க; கவுணியர்க்கு - ஆளுடைய
பிள்ளையாருக்கு, பால் சுரந்த - ஞானப்பால் சுரந்தருளிய, கலசம் போற்றி -
கலசம் போலும் கொங்கைகள் காக்க; இரும்பு மனம் - இரும்பு போலும்
வலிய மனத்தை, குழைத்து - இளகச் செய்து, என்னை - (பிறவிக்கடலுள்
அழுந்தும்) அடியேனை, எடுத்து - (அழுந்தாவகை) தூக்கி, ஆண்ட -
ஆண்டருளி, அம் கயல்கண் - அழகிய கயல்போலும் கண்களையுடைய,
எம்பிராட்டி - எம் இறைவியின், அரும்பும் - அரும்புகின்ற, இளந்கை
போற்றி - புன்முறுவல் காக்க; ஆரண நூபுரம் - வேதங்களாகிய சிலம்புகள்,