எவ்வமுறப் புழுவரித்தன் முகமொடிதல்
பெரும்பாலு மிப்பூ ணேந்தல்
பெய்வளையார் தமக்கேயாந் தரிக்கின்மகப்
பேறுமுதற் பேறுண்டாகும். |
(இ
- ள்.) அ வழியில் படுபவளம் குணம் - அவ்விடங்களிற்றோன்றிய
பவளத்தினது நிறமானது, முருக்கம்பூ பசுங்கிளி மூக்கு அலர்ந்த செவ்வி
செவ்வரத்த மலர் கொவ்வைக் கனி போலும் - முருக்க மலரையும் பசிய
கிளியின் மூக்கையும் மலர்ந்த பருவத்தையுடைய செவ்வரத்த மலரையும்
கொவ்வைக் கனியையும் ஒக்கும்; திருகிக்கோடல் எவ்வம் உறப் புழு
அரித்தல் முகம் ஒடிதல் குற்றம் - திருகிக் கோணுதலும் குற்றம் பொருந்தப்
புழு அரித்தலும் முகமொடிதலும் (அதற்குரிய) குற்றங்களாகும்; இ பூண்
ஏந்தல் பெரும்பாலும் பெய்வளையார் தமக்கே ஆம் - இப் பவளங்களைத்
தரித்தல் பெரும்பாலும் வளையலையணிந்த மகளிருக்கே உரியதாகும்;
தரிக்கின் - அவர்கள் அணிந்தால், மகப்பேறு முதல்பேறு உண்டாகும் -
மக்கட்பேறு முதலாகிய பயன்கள் உண்டாகும் எ - று.
முருக்கம்பூ
முதலியவற்றின் நிறத்தைப்போலும் என்க. குணமென்றது
நிறத்தை. இப்பூண் - இதனாலாகிய அணியை. பெரும்பாலும் என்றமையால்
சிறுபான்மை பிறவற்றுடன் கலந்து ஆடவர் அணிதலுண்டென்க.
"கருப்பத் துளையவுங்
கலலிடை முடங்கலும்
திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்" |
என்னும் சிலப்பதிகார
அடிகளும், 'இனிக் குணமிக்குக் குற்றங்கணீங்கியன
நிறமும் உருட்சியும் சிந்துரமும் ஈச்சங்காயும் முசுமுசுக்கைக் கனியும்
தூதுவழுதுணம் பழமும் போல்வன வெனக் கொள்க' என்னும் அடியார்க்கு
நல்லார் உரையும் இங்கு அறியற்பாலன. (81)
இரவியெதி ரெரியிறைக்குங் கல்லுமதி
யெதிர்செழுநீ ரிறைக்குங் கல்லும்
உரையிடுமொன் பதினொன்றி னுட்கிடையாய்க்
கிடக்குமென வொன்பான் வேறு
மரபுரைத்து வணிகரே றாகியவா
னவரேறு வடபா னோக்கிப்
பரவியிருந் தருச்சித்து மணிகைக்கொண்
டெதிர்மதுரைப் பரனை நோக்கா. |
(இ
- ள்.) இரவி எதிர் எரி இறைக்கும் கல்லும் - சூரியன் முன் தீயை
உமிழும் சூரிய காந்தக் கல்லும், மதி எதிர் செழுநீர் இறைக்கும் கல்லும் -
சந்திரன் முன் தண்ணிய நீரைச் சிந்தும் சந்திர காந்தக் கல்லும், உரையிடும்
ஒன்பதில் ஒன்றில் உட்கிடையாய்க் கிடக்கும் என - முன் கூறிய ஒன்பது
மணிகளுள் ஒன்றின் உட்கிடையாக அடங்கியிருக்குமென்று, ஒன்பான் வேறு
|