I


மாணிக்கம் விற்ற படலம்701



மரபு உரைத்து - நவமணிகளின் வெவ்வேறாகிய தன்மையைக் கூறி, வணிகர்
ஏறு ஆகிய வானவர் ஏறு - வணிகர் சிங்கமாக வந்த வானவர் சிங்கமாகிய
இறைவன், வடபால் நோக்கி இருந்து பரவி அருச்சித்து - வடக்கு முகமாக
நோக்கியிருந்து துதித்துப் பூசித்து, மணி கைக் கொண்டு மதுரைப் பரனை
எதிர் நோக்கா - மணிகளைக் கையில் எடுத்து மதுரைச் சொக்கலிங்க
மூர்த்தியை எதிரே பார்த்து எ - று.

     கிடைக்குமெனக் கூறி. இங்ஙனம் மரபுரைத்து என்க. தலைமை
யுடையாரென்பதனை ஏறு என்பதனாற் கூறினார். முன் கிழக்கு
நோக்கியிருந்து மணிகளினியல்பு கூறியவர், இப்பொழுது வடக்கு
நோக்கியிருந்து அருச்சித்தாரென்றார்; அவ்வாறிருத்தல் மரபு போலும்;
மதுரைப்பரனை எதிர் நோக்குதற் பொருட்டு வடக்கு நோக்கினாருமாம். (82)

அஞ்சலிசெய் தகநோக்கா லிக்குமரற்
     களவிறந்த வாயுள் செல்வம்
விஞ்சுகவென் றளித்தருள விறைமகனும்
     விண்ணிழிந்த விமான நோக்கிச்
செஞ்சரணம பணிந்திருகைத் தாமரையும்
     விரித்தேற்றான் செல்வ நாய்கர்
மஞ்சனையும் புடைநின்ற வமைச்சரையு
     நோக்கிமுக மலர்ந்து சொல்வார்.

     (இ - ள்.) அஞ்சலி செய்து அக நோக்கால் இ குமரற்கு அளவு
இறந்த ஆயுள் செல்வம் விஞ்சுக என்று அளித்தருள - அஞ்சலித்துத்
திருவுளக் குறிப்போடு இவ்வரசிளங் குமரனுக்கு அளவற்ற வாழ்நாளும்
செல்வமும் ஓங்குக என்று கூறிக் கொடுத்தருள, இறைமகனும் - அரச
குமாரனும், விண் இழிந்த விமானம் நோக்கி - வானுலகினின்றும் இறங்கிய
விமானத்தைப் பார்த்து, செஞ்சரணம் பணிந்து - சொக்கலிங்க மூர்த்தியின்
சிவந்த திருவடிகளை வணங்கி, இருகைத் தாமரையும் விரித்து ஏற்றான் -
தாமரை மலர்போலும் இரண்டு கைகளையும் விரித்து வாங்கினான்; செல்வ
நாயகர் - (அப்பொழுது) செல்வத்தையுடைய வணிகராகிய சோமசுந்தரக்
கடவுள் மஞ்சனையும் படை நின்ற அமைச்சரையும் நோக்கி - அந்தப்
புதல்வனையும் அருகில் நின்ற மந்திரிகளையும் நோக்கி, முக மலர்ந்து
சொல்வார் - முக மலர்ச்சியுடன் சொல்வாராய் எ - று.

     கூறியதுடன் அங்ஙனம் ஆக வென்று திருவுளம்
பற்றியருளினாரென்பார், 'அகநோக்கால்' என்றார். மஞ்சன் : மைந்தன்
என்பதன் போலி. சொல்வார் : எச்சம். (83)

இம்மணியா லிழைத்துநவ முடிசூட்டி
     யிச்சிங்க விளவெ றன்ன
செம்மறனை யபிடேக பாண்டியனென
     றியம்புமெனச் செம்பொன் றூக்கிக்