என்பது தோன்ற 'ஈருருவாய்'
என்றார். வணிகேசர் : குணசந்தி. திருமிடற்றின்
கருமைக்கு நஞ்சினையுண்டல் காரணமாகலின் 'இறவாவாறு காருருவா
யெழுமிடறு' என்றார். வணிகேசர் உருவாய் நின்றவர் இவர் என விகுதி
பிரித்துக் கூட்டுக; பார் என்பதனை ஆகு பெயராக்கி, மனிதருருவாய் நின்ற
என்றுரைத்தலுமாம். இச்செய்யுளில் ஒன்று முதல் ஏழு எண்களின் பெயர்
கூறியது எண்ணலங்காரம்; அஞ்சு, ஆறு, ஏழு என்பன ஈண்டு எண்ணுப்
பெயர்களல்லவேனும் சொல்லொப்புமை நோக்கி எண்ணாகக் கொள்ளப்படும்;
எழுகூற்றிருக்கை முதலியவற்றிலும் இங்ஙனம் வருதல் காண்க. (85)
தேன்செய்த
கொன்றைநெடுஞ் சடையார்முன்
றாழ்ந்தெழுந்து செங்கை கூப்பி
யான்செய்யுங் கைம்மாறா யெம்பிராற்
கொன்றுண்டோ யானு மென்ன
தூன்செயுட லும்பொருளு முயிருமெனி
னவையாவு முனவே யையா
வான்செய்யு நன்றிக்கு வையகத்தோர்
செய்யுங்கைம் மாறுண்டேயோ. |
(இ
- ள்.) தேன் செய்த கொன்றை நெடுஞ் சடையார் முன் - தேன்
பொருந்திய கொன்றை மலர் மாலையையணிந்த நீண்ட சடையையுடைய
சொக்கலிங்கக் கடவுளின் திருமுன், தாழ்ந்து எழுந்து செங்கை கூப்பி -
வீழ்ந்து வணங்கி எழுந்து சிவந்த கைகளைத் தலைமேற் குவித்து, எம்பிராற்கு
- எம் பெருமானாகிய நினக்கு, யான் செய்யும் கைம்மாறாய் ஒன்று உண்டோ
- அடியேனாற் செய்யப்படும் எதிருதவியாக ஒன்றுண்டோ, யானும் என்னது
ஊன்செய் உடலும் பொருளும் உயிரும் எனின் - யானும் என்னுடைய
தசையமைந்த உடலும் பொருளும் ஆவியும் என்றால், ஐயா அவையாவும்
உனவே - ஐயனே அவை முற்றும் உன்னுடையனவே, வான் செய்யும்
நன்றிக்கு - முகில் செய்த உதவிக்கு, வையகத்தோர் செய்யும் கைம்மாறு
உண்டோ - நிலவுலகத்தார் செய்கின்ற கைம்மாறு உண்டோ
(இல்லையென்றபடி) எ - று.
யாவர்க்கும்
மேலாம் அளவிலாச் சீருடையானாகிய பெருமான்
யாவர்க்கும் கீழாகிய என்னை ஆட்கொண்ட பெருங்கருணைக்குக்
கைம்மாறாவது யாதொன்றும் இல்லையென்பான், 'யான் செய்யுங் கைம்மாறா
யெம்பிராற் கொன்றுண்டோ' என்றும், யானும் என் உடல் முதலியவும் நின்
உதவிக்கு ஈடாகாவேனும் அவற்றையளித்து ஒருவாறாக என்
கட்டுப்பாட் டுணர்ச்சியை வெளிப்படுத்தலாமென்னின் அவையெல்லாம்
நின்னுடையவேயாகலின் யானென்றும் என்னுடையதென்றும்
கூறுதற்கொன்றுமில்லை யென்பான், 'அவை யாவும் உனவே' என்றும்
கூறினானென்க;
"பண்டாய
நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லைக் கடையேனைத்-தொண்டாகக்
கொண்டருளுங் கோகழியெங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை" |
|