"அன்றே யென்ற னாவியு
முடலு முடைமை யெல்லாமுங் குன்றேயனையா
யென்னையாட்கொண்ட போதே கொண்டிலையோ" என்னும் திருவாசகத்
திருப்பாட்டுகள் இங்குச் சிந்திக்கற்பாலன. யானும் உயிரும் என வேறு
கூறியது முதலும் சினையுமாகக் கொண்டென்க; "ஊன்கெட் டுயிர்கெட்
டுணர்வு கெட்டெ னுள்ளமும் போய், நான் கெட்ட வா பாடி" என்பதும்
நோக்குக. "வான் செய்யு நன்றிக்கு வையகத்தோர் செய்யுங் கைம்மா
றுண்டேயோ" என்றது இறைவன் பிறர்பால் உதவிபெறுதற்கோர்
குறைபாடுடையனல்லன் என்பதும், அவன் உயிர்களுக்குச் செய்யு
முதவியெல்லாம் கைம்மாறு கருதியன அல்லவென்பதும் தோன்ற
நின்றமையால் பிறிது மொழிதல் என்னும் அணி.
"கைம்மாறு வேண்டா
கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு" |
என்னும் திருக்குறள்
நோக்குக. என்னது : விரித்தல். உன : குறிப்பு
வினைமுற்று. (86)
என்னாமுன் வழுத்தலுறும் விறன்மாறன்
கோக்கொழுந்தை இகல்வேல் விந்தை
மன்னாகு மிவற்குமன வாக்கிறந்த
பூரணமா மதுரை நாதன்
பொன்னாரு* மணிமகுடஞ் சூடமணி
நல்குதலாற் புவிய னேகம்
பன்னாளு முறைபுரியத் தக்கதென
வாழ்த்தினார் பல்சான் றோரும். |
(இ
- ள்.) என்னா முன் வழுத்தல் உறும் விறல்மாறன்
கோக்கொழுந்தை - என்றிங்ஙனமாகத் துதிக்கும் வெற்றியையுடைய வீர
பாண்டியன் புதல்வனை, பல் சான்றோரும் - பல அறிவு நிறைந்த பெரியாரும்,
இகல்வேல் விந்தைமான் ஆகும் இவற்கு - போருக்குரிய வேற்படை ஏந்திய
வீரமகளின் தலைவனாகிய இவ்வழுதிக்கு, மனம் வாக்கு இறந்த பூரணம் ஆம்
மதுரை நாதன் - உள்ளத்தையும் உரையையும் கடந்த முழு நிறைவாகிய
மதுரை நாயகனாகிய சொக்கலிங்கப் பெருமான், பொன் ஆரும் மணிமகுடம்
சூட - அழகு பொருந்திய மணி முடியினைச் சூடுதற்கு, மணி நல்குதலால் -
மணிகளை அளித்தருளினமையால், புவி அனேகம் - உலக முழுதும், பல்
நாளும் - எக்காலமும், முறை புரியத் தக்கது என வாழ்த்தினார் - (இவனால்)
ஆட்சி செய்யத்தக்கது என்று வாழ்த்தினார்கள் எ - று.
பின்பற்றிப்
போனார்; அவருள் வழுத்தலுறும் கோக்கொழுந்தைப் பல்
சான்றோரும் வாழ்த்தினார் என முடிக்க. கொழுந்து - கொழுந்து போலும்
இளம்பிள்ளை; கோக்கொழுந்து - அரசிளங்குமரன். பொன்னாரும் -
பொன்னாற் செய்த என்றுமாம். அனேகம் - முழுதுமென்னும் பொருட்டு.
பன்னாளும் - பல்லூழிக் காலமும்; எந்நாளும். புரியத் தக்கது - புரிகவென
வியங்கோளுமாம். (87)
(பா
- ம்.) * பொன்னாகும்.
|