மகுடாபிடேக
விழாவானது தொல்காப்பியத்தில் 'மண்ணு மங்கலம்'
என்னும் பெயராற் கூறப்படுகின்றது. புங்கவர் முறையால் நாமம் இசைப்ப
என்க. (91)
போர்மகட்
குறையு ளான புயத்தபி டேகத் தென்னன்
தேர்முதற் கருவித் தானைத் தெவ்வர்நீண் முடியெ லாந்தன்
வார்கழற் கமலஞ் மனுமுறை பைங்கூழ் காக்குங்
காரெனக் கருணை பெய்து வையகங் காக்கு நாளில். |
(இ
- ள்.) போர்மகட்கு உறையுள் ஆன புயத்து அபிடேகத் தென்னன்
- போருக்குரிய வீரமகளுக்கு இருப்பிடமாகிய தோளையுடைய அபிடேக
பாண்டியன், தேர் முதல் கருவித்தானைத் தெவ்வர் நீள் முடி எலாம் - தேர்
முதலிய கருவியாகிய படையினையுடைய பகைவருடைய நீண்ட முடிகள்
அனைத்தும், தன் வார்கழல் கமலம் சூட - தனது நெடிய வீரகண்டையை
யணிந்த அடியாகிய தாமரை மலரைச் சூட, மனுமுறை - மனுநூல் வழியே,
பைங்கூழ் காக்கும் கார் என - (மழை பொழிந்து) பயிரை ஓம்பும் முகில்
போல, கருணை பெய்து - கருணை சொரிந்து, வையகம் காக்கும் நாளில்
- உலகத்தைப் புரக்கும் நாளிலே எ - று.
கருவித்தானை
- கருவியாகிய தானை; இருபெயரொட்டு. கருணை
பெய்து என்பதற்கேற்ப மழை பொழிந்து என விரித்துரைக்க. தென்னன்
மனுமுறை காக்கு நாளில் என இயையும். (92)
[எழுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
|
தந்தைதன்
காமக் கிழத்திய ரீன்ற
தனயராய்த் தனக்குமுன் னவராய்
முந்தைநா ளரசன் பொன்னறை முரித்து
முடிமுதற் பொருள்கவர்ந் துட்குஞ்
சிந்தைய ராகி மறுபுலத் தொளித்த
தெவ்வரைச் சிலர்கொடு விடுப்ப
வந்தவர் கவர்ந்த தனமெலா மீள
வாங்கினா னீர்ங்கதிர் மருமான். |
(இ
- ள்.) தந்தை தன் காமக் கிழத்தியர் ஈன்ற தனயராய் - தன்
தந்தையின் காமக் கிழத்தியர் பெற்ற புதல்வராய், தனக்கு முன்னவராய் -
தனக்கு மூத்தவர்களாய், முந்தை நாள் அரசன் பொன் அறை முரித்து -
முன்னொரு நாளில் மன்னனது கருவூலத்தின் தாழை முரித்து, முடி முதல்
பொருள் கவர்ந்து - முடி முதலிய பொருள்களை வௌவி, உட்கும்
சிந்தையராகி - (அதனால்) அஞ்சிய சிந்தையையுடையராய், மறு புலத்து
ஒளித்த தெவ்வரை - வேற்றூரிற் புகுந்து ஒளித்த பகைவரை, சிலர்
கொடுவிடுப்ப - சிலர் பிடித்துக் கொண்டு வந்து விடுக்க, வந்தவர் கவர்ந்த
தனம் எலாம் - வந்தவராகிய அன்னோர் கவர்ந்த பொருளனைத்தையும், மீள
வாங்கினான் ஈர்ங்கதிர் மருமான் - திரும்பவும் வாங்கினான் குளிர்ந்த
|