சந்திரனது அமிழ்தத்தாற்
சாந்திசெய்யப் பட்ட மையின் மதுரை யென்பது
பெயராயிற்று என மேல் இப்புராணத்துள் ஓதப்படுதலானும், சந்திரன்
முகத்திற்கு உவமமாகலானும் மதுரையைத் திருமுகமென்றுங் கூறினார்.
அவ்வயிறு - அழகியவாறு : மகரம் வகரமாய்த் திரிந்தது. "மடவோள் பயந்த
மணிமரு ளவ்வாய்க், கிண்கிணிப் புதல்வர்" என்று புறத்தில்
வருதலுங்
காண்க. கொங்கையே என்பது முதலிய ஏகாரங்கள் எண்ணுக் குறித்தன;
"எண்ணே கார மிடையிட்டுக் கொளினும்
எண்ணுக் குறித்தியலு மென்மனார் புலவர்" |
என்பது தொல்காப்பியம்.
புரமே என்பதில் ஏ : ஈற்றசை. இயை
புருவகம். (2)
வடுவின் மாநில
மடந்தைமார் பிடைக்கிடந் திமைக்கப்
படுவி லாரமே பாண்டிநா டாரமேற் பக்கத்
திடுவின் மாமணி யதன்புற நகரெலா மிவற்றுள்
நடுவி னாயக மாமணி மதுரைமா நகரம். |
(இ
- ள்.) வடு இல் - குற்றமில்லாத, மாநிட மடந்தை - பெரிய
நிலமகளின், மார்பு இடை - மார்பின்கண், கிடந்து இமைக்கப்படு - இருந்து
விளங்குகின்ற, வில் ஆரமே - ஒளியையுடைய பதக்கமே, பாண்டிறாடு -
பாண்டிநாடாகும்; ஆரம் மேற்பக்கத்து இடு - அம் மதாணியின்
சுற்றுப்புறங்களிற் பதித்த, வில் மாமணி - ஒளியையுடைய பெரியமணிகளே,
அதன்புறம் நகர் எலாம் - அப்பாண்டிநாட்டின் புறத்துச் சூழ்ந்த
நகரங்களனைத்துமாகும்; இவற்று நடுவுள் - இம் மணிகளின் நடுவிடத்துள்ள,
வில் நாயக மாமணி - ஒளியினையுடைய தலைமையாகிய பெரியமணியே,
மதுரை மாநகரம் - மதுரையாகிய பெரிய நகரமாகும் எ - று.
இமைக்கப்படு
- இமைக்கின்ற. ஆரம் - பதக்கம்; மதாணி :
உள்பிரித்துக் கூட்டப்பட்டது. இன் சாரியையாக்கி நடுநாயகம் எனினும்
ஆம். (3)
திரும கட்கொரு
தாமரைக் கூடமே திருால்
மரும கட்குவெண் டாமரை மாடமே ஞானந்
தரும கட்கியோ கத்தனிப் பீடமே தரையாம்
பெரும கட்கணி திலகமே யானதிப் பேரூர். |
(இ
- ள்.) தரையாம் பெருமகட்கு - நிலமாகிய பெருமாட்டிக்கு,
அணிதிலகமே ஆனது - அணிகின்ற திலகமேயானதாகிய, இப்பேர் ஊர் -
இப்பெரிய நகரமானது, திருமகட்கு ஒரு தாமரைக்கூடம் - அலை மகளுக்கு
ஒப்பற்ற தாமரையில்லம்; திருமால் மருமகட்கு - திருமாலின் மருகியாகிய
கலைமகளுக்கு, வெண்தாமரை மாடம் - வெண்தாமரை யில்லம்; ஞானம்
தருமகட்கு - ஞானத்தைப் பாலிப்பவராகிய மலை மகளுக்கு, யோகத்தனிப்
பீடம் - ஒப்பற்ற யோகபீடம் எ - று.
திருமகள்
- திருவாகிய மகள்; இலக்குமி பின் வெண்டாமரை
யெனலால் முற்கூறி யது செந்தாமரை யென்க. தாமரை யிரண்டும் மலருக்கு
|